6 பேருக்கு சயனைடு கொடுத்து கொன்ற ஜாலியின் பட்டியலில் அடுத்து யார்...? போலீசார் வெளியிட்ட தகவல்கள்

கைதான ஜாலி மற்றும் கொல்லப்பட்ட 6 பேர்

  • News18
  • Last Updated :
  • Share this:
சொத்து மற்றும் தனது சுதந்திரத்திற்கு தடையாக இருந்ததற்காக தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு வைத்து கொன்றதாக கைதாகியுள்ள ஜாலி என்ற பெண் அடுத்து இரண்டு குழந்தைகளை கொல்ல இருந்ததாக போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி சேர்ந்த 47 வயது பெண் ஜோலி. கடந்த 2002-ம் ஆண்டு தனது மாமியார் தன்னை அதிகாரப்படுத்தியதால் அவருக்கு மட்டன் சூப்பில் சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், சொத்து விவகாரத்தில் மாமனாரையும் 2006-ம் ஆண்டு அதேபோல சயனைடு கொடுத்து கொன்றார். இருவரது மரணமும் இயற்கையானது என்றே உறவினர்கள் நம்பியுள்ளனர்.

வெளிநாட்டில் கணவர் இருந்ததால் தனது விருப்பம் போல ஜாலி வாழ்ந்து வந்துள்ளார். மேலும், தான் என்.ஐ.டி.யில் பேராசிரியராக இருப்பதாகவும் அக்கம் பக்கத்தில் கூறியுள்ளார். ஜாலியின் போக்கு சரியில்லாததால் கணவர் அவரை கண்டித்துள்ளார். இதனால், கணவரையும் ஜாலி கொலை செய்துள்ளார். மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததாக ஜாலி கூறியுள்ளார். ஆனால், அவரது உடலில் விஷம் கலந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதோடு நிற்காமல், கணவரின் சித்தப்பா மகன் சாஜி மீது ஜாலிக்கு ஒரு கண் இருந்துள்ளது. சாஜியுடன் வாழ நினைத்த ஜாலி, சாஜியின் மனைவி மற்றும் குழந்தைக்கு சயனைடு கொடுத்து கொன்றுள்ளார். இந்த 6 மரணத்தின் போதும் ஜாலி அந்த இடத்தில் இருந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த ஜாலியின் கணவரின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து, ஜாலியை போலீசார் விசாரிக்கையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்த தான், வெளியில் பேராசிரியை என்று பொய் சொல்லி, மாமனார், மாமியார், கணவர் என்று 6 பேரை எப்படி கொலை செய்தேன் என்று வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் கேரளாவையே உலுக்கியது.

தற்போது, சிறையில் உள்ள ஜாலி, நகைக்கடையில் தங்கத்தை பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் சயனைடை அங்கு பணியாற்றும் இருவர் உதவியுடன் பெற்று இத்தனை கொலைகளையும் செய்துள்ளார். நகைக்கடையில் பணியாற்றும் மேத்தீவ் மற்றும் பிராஜி குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாலியின் தொலைபேசியை ஆராய்ந்ததில் சாஜியுடன் அவர் மணிக்கணக்கில் பேசியது தெரிய வந்தது. இதனால், சாஜியும் விசாரணை வளையத்தில் உள்ளார். இந்த நிலையில், ஜாலி அளித்துள்ள வாக்கு மூலத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பெண் குழந்தைகள் என்றாலே ஜோலிக்கு சுத்தமாக பிடிக்காதாம். பெண் குழந்தை வேண்டாம் என்ற காரணத்தால் இரண்டு முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறாராம். இதனால் தனது குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளையும் அவர் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜாலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Also See....

Published by:Sankar
First published: