முகப்பு /செய்தி /இந்தியா / மளிகைக்கடையை சூறையாடிய காட்டு யானை.. வைரலான சிசிடிவி! அதிர்ச்சியில் கடைக்காரர்!

மளிகைக்கடையை சூறையாடிய காட்டு யானை.. வைரலான சிசிடிவி! அதிர்ச்சியில் கடைக்காரர்!

சிசிடிவி காட்சியில் பதிவான காட்டுயானை

சிசிடிவி காட்சியில் பதிவான காட்டுயானை

Kerala elephant | கேரளாவில் மளிகைக்கடைக்குள் தலையை புகுத்தி அங்கிருந்த மைதா மாவு, வெங்காயம் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு சென்ற காட்டுயானையால் பரபரப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் மளிகைக்கடையை தாக்கி சூறையாடி உள்ளே இருந்த மைதா மாவு, வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு சென்ற காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாரில் சொக்கநாடு எஸ்டேட்டில் வசிக்கும் புண்யவேல் என்பவரின் மளிகை கடைக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை கடையின் கதவை உடைத்து தலையை மட்டும் கடைக்குள் நீட்டி அங்கிருந்த ஒரு மூட்டை மைதா, வெங்காயம் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு விட்டு இதர பொருட்களையும் தேடி பார்க்கிறேன் என்ற பெயரில் சேதப்படுத்தியுள்ளது.

மேலும், உடற்பயிற்சிக்காகபயன்படுத்தபடும் கடைக்குள் இருந்த  டிரெட்மில்லையும் சேதப்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இது 16வது முறையாக தனதுகடை மீது யானையின் தாக்குதல் நடந்துள்ளதாக கடை உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

யானை கடையை உடைத்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  இதே போல  மூணாறு சூர்யநெல்லியில், விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி வரும்  கொட்டகை, நீர் விநியோகத்திற்காக பொருத்தப்பட்ட மோட்டார் மற்றும் பல ஏலக்காய் செடிகளையும் யானை தாக்கி நாசமாக்கியுள்ளது.

First published:

Tags: Elephant, Kerala