கேரளாவில் காதலர் தினமான நேற்று பெண் ஒருவர் தனது கணவருக்கு கல்லீரலை தானமாக வழங்கினார். 17 மணி நேர சிகிச்சைக்கு பின்னர், கணவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது நேசத்துக்குரியவர்களுக்கு இதயத்தையே அளிப்பதாக பலர் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கேரளாவில் காதலர் தினமான நேற்று மனைவி ஒருவர் தனது காதல் கணவருக்கு கல்லீரலை தானமாக வழங்கி பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.
கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுபீஷ். இவரது மனைவி பிரவிஜா. சில ஆண்டுகளுக்கு முன்பு சுபீஷுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மனைவி பிரவிஜா அவரை எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தப்போது, சுபீசுக்கு கல்லீரலில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுபீஷ் சிகிச்சை பெற்றுவந்தார். சுபீசுக்கு மாற்று கல்லீரல் பொருத்தினால் மட்டுமே அவர் குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏழ்மை நிலையில் இருக்கும் தாங்கள் கல்லீரலை எப்படி பெறுவது, கல்லீரலை யார் தானமாக வழங்குவார்கள் என்று சுபீசு- பிரவிஜா தம்பதியினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க: நாங்க ரொம்ப ஸ்ட்ரிட்; ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா குழுமம் அதிரடி உத்தரவு
இந்நிலையில், தனது கல்லீரலையே கணவருக்கு தானமாக வழங்கலாம் என்று எண்ணிய பிரவிஜா இது குறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளார். பிரவிஜாவின் கல்லீரல் சுபீஷுக்கு பொருந்துமா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். முடிவு சாதகமாக வரவே, அவருக்கு பிரவிஜாவின் கல்லீரலை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, காதலர் தினமான நேற்று சுபீஷுக்கு கல்லீரலை பொருத்தும் சிகிச்சை நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய சிசிச்சை 17 மணி நேரம் நீடித்தது. பிரவிஜாவின் கல்லீரலின் இடது பக்கத்தில் 40 சதவீதம் அகற்றப்பட்ட சுபீஷுக்கு பொருத்தப்பட்டது. இரவு 10.30 மணியளவில் அறுவை சிகிச்சை முடிவு பெற்றது. மொத்தம் 28 மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர்.
மேலும் படிங்க: திருப்பதியில் ஓராண்டுக்குப் பிறகு பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம்
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த 48 மணிநேரம் சுபீஷுக்கு முக்கியமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடலின் அனைத்து பாகங்களையும் கல்லீரலுடன் இணைக்கும் பணி மீதமுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.