கேரளா 69.95% அசாம் இறுதிகட்ட வாக்குப்பதிவில் 82.15% வாக்குகள் பதிவு - 7 மணி நிலவரம்

மாதிரி படம்

அசாமில் இன்று நடந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் இரவு 7 மணி நிலவரப்படி 82.15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

 • Share this:
  தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கம் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அசாமில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது.

  தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. இரவு 7 மணி நிலவரப்படி தமிழகத்தில் 71.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

  ‘இது தொலைபேசி வாயிலாக கிடைத்த தகவல் தான். இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். முழுமையான தகவல் வந்த பின்னர் தான் துல்லியமாக அறிவிக்க முடியும்’ என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். தமிழகத்தில் அதிகப்படியாக கள்ளக்குறிச்சியில் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  குறைந்தபட்சமாக சென்னை 59.4 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

  இரவு 7 மணி நிலவரப்படி கேரளத்தில் 69.95 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் இன்று நடந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் இரவு 7 மணி நிலவரப்படி 82.15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் இன்று நடந்த 3-ம் கட்ட வாக்குப்பதிவில் இரவு 7 மணி நிலவரப்படி 77.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  Published by:Ramprasath H
  First published: