காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜக சின்னத்தில் எரியும் விளக்கு... வாக்குப்பதிவு நிறுத்தம்...!

Lok Sabha Election 2019 | இயந்திரத்தை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜக சின்னத்தில் எரியும் விளக்கு... வாக்குப்பதிவு நிறுத்தம்...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: April 23, 2019, 10:49 AM IST
  • Share this:
கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வரும் நிலையில், கோவளம் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

அசாம், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் 1,594 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.


கேரள மாநிலம் கோவளம் அருகே அமைக்கப்பட்டிருந்த 151-வது வாக்குச்சாவடியில், காங்கிரசின் சின்னத்துக்கு வாக்களித்தால், பாஜகவின் சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்ததை அடுத்து, வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இயந்திரத்தை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading