ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில்... டார்கெட் வைத்து இந்தி படிக்கும் கிராமம்... அனைவருக்குமே இந்தி தெரியுமாம்...

கேரளாவில்... டார்கெட் வைத்து இந்தி படிக்கும் கிராமம்... அனைவருக்குமே இந்தி தெரியுமாம்...

இந்தி கற்கும் கிராம மக்கள்

இந்தி கற்கும் கிராம மக்கள்

அந்த கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், அந்த கிராம மக்களும் இந்தி மொழி கற்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறதாக தகவல்கள் வருகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளா மாநிலம் செல்லனூர் என்ற கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் இந்தி மொழியை கற்று வருகின்றனர்.  அடுத்த குடியரசு தினத்திற்குள கிராம மக்கள் அனைவரும் இந்தி கற்றிருப்பார்கள் என அந்த ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

  கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்தி திணிப்பை தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில், செல்லனூர் ஊராட்சியில் உள்ள மக்கள் இந்தி மொழியை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 72 வயதுள்ள ஜானகி அம்மாளும் இந்தி மொழி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

  அந்த கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், அந்த கிராம மக்களும் இந்தி மொழி கற்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறதாக தகவல்கள் வருகின்றன.

  இதையும் படிக்க : மதுவும் லாட்டரியும் தான் அரசின் வருவாய் என்பது வெட்கக்கேடு - கேரளா ஆளுநர் காட்டம்

  கிராமத்தில் உள்ள மனித வளத்தைப் பயன்படுத்தி குறைந்த நிதியில் ஒரு தனித்துவமான திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. வரும் குடியரசு தினத்திற்குள் அனைவரும் இந்தி கற்க, ஒரு வாரத்தில் 8 முதல் 10 வகுப்பு வரை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு இடைவேளைகளிலும், தேநீர் இடைவேளைகளிலும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

  இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் இந்தி மொழி கற்றால், தென் இந்தியாவில் இந்தி தெரிந்த முதல் மக்கள் உள்ள முதல் கிராமமாக இது இருக்கும்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Hindi, Imposing Hindi, Kerala