Home /News /national /

12வயது கனவு நனவானது.. ஏர் ஹோஸ்டஸாக விமானத்தில் பறக்கும் பழங்குடி இனப்பெண் - குவியும் பாராட்டு

12வயது கனவு நனவானது.. ஏர் ஹோஸ்டஸாக விமானத்தில் பறக்கும் பழங்குடி இனப்பெண் - குவியும் பாராட்டு

பழங்குடியின பெண் கோபிகா

பழங்குடியின பெண் கோபிகா

கேரளா மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் முதல் முதலாக ஏர் ஹோஸ்டஸாக பணிக்கு சேர்ந்து அசத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
    ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உயரப் பறக்கும் கனவுகளை வெற்றிபெறுவது அவரை பின் தொடர்ந்து வரும் பலருக்கும் உத்வேகத்தையும் நம்பிக்கையும் அளிக்கும். இந்த வார்த்தைக்கு உதாரணமாக இருப்பவர் கேரளா மாநிலத்தின் பழங்குடியின பெண் கோபிகா கோவிந்த். கரிம்பாலா பழங்குடி இனத்தில் பிறந்த இவர், தனது 12ஆவது வயதில் விமானத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

    இந்த கனவை முதலில் இவர் பெற்றோர் உள்ளிட்ட மற்ற யாரிடமும் தெரிவித்ததில்லை. தனது பள்ளிப்படிப்பை முடித்ததும் இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டிய வழிகளை அவர் தகவல்களை சேகரிக்க தொடங்கினார். தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்றால், அதற்கு பெரும் செலவாகும் என்பது அவருக்கு தெரியவந்தது. தனது குடும்பத்தினரால் அந்த தொகையை தர முடியாதே என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.

    கவலையில் இருந்த கோபிகாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக கேரளா அரசின் பழங்குடி இன மாணவர்கள் கல்வி திட்டம் தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தின் பயனாளராகத் தன்னை சேர்த்துக்கொண்ட கோபிகா, கண்ணூரில் எம்எஸ்சி வேதியியல் படித்துக் கொண்டே, வயநாட்டில் உள்ள ட்ரீம் ஸ்கை ஏவியேஷன் பள்ளியில் விமான பணிப்பெண்ணிற்குப் பயிற்சி பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க: பொருளாதாரத்தில் டாப்.. பிரிட்டனை தாண்டி இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேற்றம்!

    இவரின் கல்விக்கான செலவு ரூ.1 லட்சத்தை அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், பயிற்சியை வெற்றிகரமாக முடித்து காட்டி தற்போது கேரளாவின் முதல் பழங்குடியின ஏர் ஹோஸ்டஸ் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரின் இந்த வெற்றிக்கு அரசின் உதவிக்கரமும், பயிற்சி பள்ளி ஆசிரியர்களின் உதவியுமே காரணம் என கூறுகிறார் கோபிகா. தன்னம்பிக்கையுடன் தனது கனவை நனவாக்கிய சாதனை படைத்த கோபிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Air hostess, Kerala

    அடுத்த செய்தி