முகப்பு /செய்தி /இந்தியா / சிறுவனை மிரட்டி பாலியல் தொல்லை.. திருநங்கைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!

சிறுவனை மிரட்டி பாலியல் தொல்லை.. திருநங்கைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!

மாதிரி படம்

மாதிரி படம்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த திருநங்கைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சிராயின்கீழ் பகுதியில் வசித்து வருபவர் சச்சு சாம்சன் ( வயது 34). திருநங்கையான இவருக்கும் 16 வயது சிறுவனுக்கும் இடையே ரயிலில் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர். 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தம்பானூர் பகுதிக்கு சிறுவனை அழைத்துச் சென்ற திருநங்கை சச்சு சாம்சன், பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். தம்பானூர் செல்ல சிறுவன் மறுத்த நிலையில், திருநங்கை அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பயம் காரணமாக இதுகுறித்து அச்சிறுவன் தன் பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

அதன்பிறகு திருநங்கை அந்த சிறுவனை செல்போன் மூலம் தொடர்ந்து அழைத்து வந்துள்ளார். ஆனால் அழைப்பை எடுக்காத  சிறுவன், தனது செல்போனில் இருந்து திருநங்கையின் எண்ணை ப்ளாக் செய்துவிட்டார். சிறுவன் இயல்பாக இல்லாததை கவனித்த பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது, திருநங்கை பாலியல் தொந்தரவு அளித்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையிடம் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.  இந்த வழக்கு, திருவனந்தபுரம் பாஸ்ட் ட்ராக் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திருநங்கைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றத்திற்காக திருநங்கை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவது கேரள மாநிலத்தில் இதுவே முதல்முறை.

First published:

Tags: Sexual harassment, Transgender