முகப்பு /செய்தி /இந்தியா / கேரள திருநர் தம்பதிக்கு குழந்தை பிறந்தது.. சோஷியல் மீடியாவில் குவியும் வாழ்த்து!

கேரள திருநர் தம்பதிக்கு குழந்தை பிறந்தது.. சோஷியல் மீடியாவில் குவியும் வாழ்த்து!

கேரள திருநர் தம்பதி

கேரள திருநர் தம்பதி

குழந்தையின் பாலினத்தை வெளியே சொல்ல முன்வரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலத்தை சேர்ந்த திருநர் தம்பதி ஸியா (Ziya) - ஸாஹத்  (Zahadh) தம்பதிக்கு குழந்தை பிறந்தது. திருநம்பி ஸாஹத் பிரசவமாக இருந்த நிலையில் நேற்று அறுவகை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

பிறப்பால் பெண்ணாக இருந்த ஸாஹத் ஆணாக மாறினார். அதேபோல் பிறப்பால் ஆணாக இருந்த ஸியா பெண்ணாக மாறினார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். 2 மாதங்கள் முன் ஸியா பாவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் இணையருடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் திருநம்பி ஸாஹத் தன் வயிற்றில் குழந்தையுடன் இருந்தார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. 

இந்நிலையில் நேற்று ஸாஹத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்து குழந்தை பிறந்தது. மேலும் ஸாஹத்தும் குழந்தையும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர் எனவும் அவர்கள் குழந்தையின் பாலினத்தை வெளியே சொல்ல முன்வரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




 




View this post on Instagram





 

A post shared by Ziya Paval (@paval19)



இது குறித்து ஸாஹத்தின் இணையர் ஸியா பேசும்போது, தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள். என்னை காயப்படுத்தும் விதமாக பல பேச்சுக்கள் வந்தன. அதற்கு இது பதிலாக இருக்கும். ஆதரித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார். மேலும் தான் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக உணர்ந்ததாகவும் ஒரு குழந்தை தன்னை அம்மா என்று அழைக்கப்போவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Kerala, Kerala Couple, Transgender