Home /News /national /

Headlines Today | கேரளாவில் பரவும் தக்காளி வைரஸ் முதல் CSK ஐபிஎல் வெற்றி வரை - இன்றைய தலைப்பு செய்திகள் ( மே 09,2022)

Headlines Today | கேரளாவில் பரவும் தக்காளி வைரஸ் முதல் CSK ஐபிஎல் வெற்றி வரை - இன்றைய தலைப்பு செய்திகள் ( மே 09,2022)

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

  தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மோனிகா தேவேந்திரன் என்பவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஏம்ஸ்பரி மாகாணத்தின் துணை மேயராக தேர்வாகியுள்ளார்.

  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்து.

  விருத்தாசலம் அருகே மெடிக்கலில் ஊசி போட்டுக்கொண்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  சென்னை அருகே சாலையோரத்தில் கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் அண்ணன் தங்கை உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

  தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.வரவிருக்கும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  ஓமன் நாட்டிற்கு வீட்டுவேலைக்காக சென்ற பெண் வேலை கிடைக்காமல் உணவின்றி தவிப்பதாகவும் தன்னை மீட்க கோரியும் கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

  சென்னை மயிலாப்பூரில் தம்பதியை கொன்று பணம், நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  வங்ககடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிர புயலாக வலுபெற்று ஆந்திரா- ஒடிசா கடற்கரையில் நாளை மறுநாள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  தமிழ்நாட்டில் தீண்டாமையை கடைப்பிடிக்கும் கிராமங்களை கொண்ட மாவட்டங்கள் பட்டியலில், மதுரை முதலிடத்தில் உள்ளதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

  அன்னையர் தினத்தை ஒட்டி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய வீடு ஒன்று கட்டித்தந்துள்ளார்.

  பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்திற்கு ஜீப்பில் கடத்த முயன்ற 4லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேச விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதித்த தடையை நீக்கிய அரசின் அறிவிப்பை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வரவேற்றுள்ளார். ஆன்மீக அரசு என்று தான் கூறியதை முதலமைச்சர் ஸ்டாலின் மெய்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு அரசு யாருக்கும் அடிபணிவதில்லை என்றும், அரசியல் கலப்பில்லாமல் இறை பணி தொடர வேண்டும் என்பதற்காகவே பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

  இமாச்சல பிரதேசத்தின் சட்டமன்ற கட்டடத்தில் காலிஸ்தான் கொடியை தோரணம் கட்டிய விவகாரத்தில் எஸ்.எஃப்.ஜே அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு மீது, உபா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  கேரளாவில் தற்போது தக்காளி வைரஸ் பரவி வரும் நிலையில், கொல்லம் மாவட்டத்தில் மட்டும் 85க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

  உக்ரைனில் பள்ளி மீது ரஷ்ய படை நடத்திய வான்வழி தாக்குதலில் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

  ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Breaking News, Chennai, Chennai Super Kings, Headlines, IPL 2022, Rain, Tamil News, Tamilnadu

  அடுத்த செய்தி