ஹோம் /நியூஸ் /இந்தியா /

உருவக்கேலியை ஒடுக்க வேண்டும்.. கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

உருவக்கேலியை ஒடுக்க வேண்டும்.. கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உடல் அமைப்புகளை வைத்து கேலி செய்யும் பாடி ஷேமிங் செய்வது ஒரு கேவலமான செயல் என்றும், இதனால் மனநலம் குன்றி பலர் இதில் பலியாகி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala |

பாடி ஷேமிங்கிற்கு எதிராக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கேரள அரசு, அதை கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கும் என்று அம்மாநில பொதுக் கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

உடல் அமைப்புகளை வைத்து கேலி செய்யும் பாடி ஷேமிங் செய்வது ஒரு கேவலமான செயல் என்றும், இதனால் மனநலம் குன்றி பலர் இதில் பலியாகி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

பேஸ்புக் பதிவில், சிவன்குட்டி தனது புகைப்படத்தில் யாரோ ஒருவர் தனது வயிற்றைக் குறைக்குமாறு ஜெலி செய்துள்ளார்."உடல் அமைப்புகளை கேலி செய்வது ஒரு கேவலமான செயல் என்று நான் பதிலளித்தேன். என்னதான் விளக்கம் கொடுத்தாலும், பாடி ஷேமிங் சொற்றொடர்கள் மிக மோசமானவை. இது நம் சமூகத்தில் பல நிலைகளில் நடக்கிறது. பாடி ஷேமிங்கிற்கு ஆளாகி, சுயநினைவை இழந்தவர்களும் நம்மிடையே பலர் உள்ளனர்,” என்றார் சிவன்குட்டி.

இதையும் படிங்க : அப்பாவிற்கு தர இருப்பது ஒரு சிறிய சதைப்பகுதியைதான்- லாலு மகளின் உருக்கமான ட்வீட்!

இது போலவே, தனது நண்பரின் மகன் ஒரு பள்ளி மாணவர், தனது நிறத்தால் பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். நிறத்தை கொண்டு அவன் சகா மாணவர்களால் கேலி செய்யப்பட்டுள்ளான்.

சிறுவன் ஆசிரியர்களிடம் புகார் செய்ததை அடுத்து மற்ற மாணவர்கள் அவருக்கு எதிராக திரும்பினர். இதனால் அந்த சிறுவன் அந்த பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற வேண்டியிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த சிறுவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது போன்று உடலை வையத்து கேலி செய்வது மிகவும் தவறான செயல். அதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் நவீன மனிதர்களாக இருக்க முயற்சி செய்வோம் என்று அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க : ஹைதராபாத்தில் மதகோஷங்களை சொல்ல சொல்லி அடித்து துன்புறுத்தப்பட்ட சட்ட மாணவர்!

உடல் கேலிகளை குழந்தைகள் சமாளிக்க கற்றுக்கொள்ளவும் அதை அறவே ஒடுக்கவும் அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். அவர்கள் கற்கும் கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக இதை எவ்வாறு மாற்றுவது என்பதை விரைவில் விவாதிப்போம். அதேசமயம், ஆசிரியர்களின் பயிற்சி நிகழ்ச்சிகளின் போது இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிப்போம் என்றார் சிவன்குட்டி.

ஒருவரின் நிறமோ செல்வமோ முக்கியமல்ல, இதயத்தில் நல்ல எண்ணம், உயர்ந்த இலட்சியங்கள் இருப்பதே முக்கியம் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Body Shaming, Kerala