Home /News /national /

புது வீட்டுக்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு திருடிய திருடர்கள்..

புது வீட்டுக்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு திருடிய திருடர்கள்..

லிஸ்ட் போட்டு திருடிய திருடர்கள்

லிஸ்ட் போட்டு திருடிய திருடர்கள்

Kerala : கேரளாவில் கடையிலிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பு மிக்க வீட்டு உபகரண பொருட்களை திருடிய திருடர்கள், கல்லாப்பெட்டியில் இருந்த 3000 ரூபாயையும் ஆட்டையை போட்டு சென்றுள்ளனர்.

கேரளாவில் புது  வாடகை வீட்டிற்கு தேவையான  சோப்பு, சீப்பு , கண்ணாடி உட்பட பல பொருள்களை லிஸ்ட் போட்டு திருடிய திருடர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சூரில், பரவட்டாணி என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் கடை ஒன்றில்  கடந்த 1 ஆம் தேதி வீட்டு சாதனங்களை திருடிய மூன்று திருடர்கள் கேரள  போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்கள் தாங்கள் புதிதாக போயுள்ள வாடகை வீட்டிற்கு சோப்பு, சீப்பு கண்ணாடி, உட்பட எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததன் பின்பு இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் புது வீட்டிற்கு தேவையான  பொருட்களை, லிஸ்ட் போட்டு  மூவராக சேர்ந்து திருடி ஆட்டோவில் கடத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, கடையிலிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபகரண பொருட்களை திருடியதுடன் கல்லாப்பெட்டியில் இருந்த மூவாயிரம் ரூபாயையும் ஆட்டையை போட்டு சென்றுள்ளனர். இந்த திருட்டில் பறவூர் பகுதியைச் சார்ந்த அருண், கோழிக்கோடு பகுதியை சார்ந்த ஆரிப், பெரிச்சல் பகுதியை சார்ந்த விஜீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Must Read : உஷார்.. போரூர் பைபாஸில் பாலியல் தொழிலாளியை வைத்து வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி..

இவர்கள் மூவர் மீதும் கேரளாவில் பல்வேறு பகுதியில் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Kerala, Theft

அடுத்த செய்தி