கேரள-தமிழக எல்லையில் இ-பாஸ் கட்டாயம்: மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்கள்..

கேரள தமிழக எல்லை

பாலக்காடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு வேலைக்காக ஏராளமான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

 • Share this:
  தமிழக கேரள எல்லையில் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், கேரள-தமிழக எல்லையோர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இ-பாஸ் நடைமுறையை ரத்துசெய்ய வலியுறுத்தி இருக்கின்றனர்.


  கேரளாவில் கொரோனாவைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு எல்லையில் உள்ள தமிழகத்துக்குச் செல்ல அந்த மாநில அரசு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. ஆனால் கேரள-தமிழக எல்லையில் உள்ள பாலக்காடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு வேலைக்காக ஏராளமான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.


  தற்போது இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் வேலைக்கு செல்லும் அவர்கள் தினமும் இ-பாஸ் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் பல்வேறு நேரங்களில் இணையதள குளறுபடி காரணமாக இ-பாஸ் எடுப்பதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
  Published by:Gunavathy
  First published: