வாழ்க்கையில் வலிகளை தாங்கினால்தான் ஜெயிக்க முடியும். வீழ்வது குற்றமல்ல வீழ்ந்த இடத்தில் இருந்து விருட்சமாக எழ வேண்டும் என்கிறார் கேரள பெண் போலீஸ் அதிகாரியான ஆனி சிவா (Aniee Siva).
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வர்க்கலா தான் இவரது பூர்வீகம். டீன்ஏஜ் பருவத்தில் விரும்பி சென்ற வாழ்க்கை ஆனிக்கு வலிகளையும் வேதனையையும் பரிசாக அளித்தது. கல்லூரியில் படிக்கும் போது துளிர்விட்ட காதல். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 18 வயதில் காதலனை கரம்பிடித்தார். காதல் வாழ்க்கை சில மாதங்களிலே கானல் நீரானது. 19 வயதில் தாயானாள். காதல் கணவன் ஆனியை 8 மாத குழந்தையுடன் வீட்டை விட்டு துரத்தினர்.
Also Read: தந்தையின் கடனுக்காக மகனின் சேமிப்பு கணக்கு முடக்கம் - மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் விவசாயி உயிரிழந்த பரிதாபம்
தாய் வீட்டுக்கு தஞ்சமடைய சென்றவரை அரவணைத்துக்கொள்ள யாரும் தயாராக இல்லை. அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். வாழ்க்கையை தனியாக எதிர்க்கொள்ள தயாரான ஆனிக்கு அவரது பாட்டி அடைக்கலம் கொடுத்தார். வாழ்க்கையில் ஜெயிக்கனும்ங்கிற வெறி ஆனிக்கு இருந்தது. தடம் மாறிய தன்னுடைய வாழக்கையை கல்வி மட்டுமே உயர்த்தும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். இளங்கலை படிப்பை முடித்துவிட்டு தொலைத்தூர கல்வி மூலம் முதுகலை படிப்பை தொடர்ந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தனது வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கு யாருடைய தயவையும் அவர் எதிர்ப்பார்க்க வில்லை. கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தார். மசாலா பொருள்கள், சலவை சோப்பு விற்கும் ஏஜெண்டாக வலம் வருவார். அதேவேளையில் கையில் அப்ளிக்கேஷனுடன் சென்று இன்சூரன்ஸ் பாலிசி பிடிப்பார். திருவிழா காலங்களில் லெமன் ஜூஸ், ஐஸ்க்ரீம் விற்பார். எந்த தொழிலையும் அவர் அவமானமாக கருதவில்லை. வர்க்கலா சுற்றியுள்ள சுற்றுலா பகுதிக்கு சென்று இதனை விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று சிலர் அறிவுறுத்த அதற்கு பயணப்பட்டார்.
Also Read: 'முதலமைச்சரின் நிதியுதவி திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்' - சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்
தன் மீது தேவையில்லாத கவனம் ஏற்படாமல் இருக்க தனது கூந்தலை கூட ஆண்களை போல ஷார்ட்டாக வெட்டிக்கொண்டார். இன்சூரன்ஸ் பாலிசி, ஜூஸ் , ஜஸ்கிரீம் என அவரது வாழ்க்கை சில காலம் உருண்டோடியது. அப்போதுதான் உறவினர் ஒருவர் போலீஸ் வேலைக்கு விண்ணபிக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அதில் கவனம் செலுத்தியுள்ளார். 2016-ம் ஆண்டு கேரள காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்தார். வேலை கிடைத்துவிட்டது என அத்தோடு நிற்காமல் தனது கல்வித்தகுதிக்கு ஏற்ற பொறுப்புக்கு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு முயற்சி செய்தார். மூன்று வருட முயற்சியின் பலனாக அவர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை க்ளீயர் செய்தார்.
ஒன்றரை வருட பயிற்சி காலம் முடிந்த நிலையில் அதே வர்க்கலா பகுதியில் கடந்த 25-ம் தேதி சப்- இன்ஸ்பெக்டராக பதவியேற்றார். இதுகுறித்து பேசிய ஆனி சிவா, “ 10 வருஷத்துக்கு முன்னாடி வர்க்கலாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் லெமன் ஜூஸ், ஐஸ்கிரீம் விற்றேன். இன்று அதே இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டராக வந்துள்ளேன். எனது கடந்த காலத்தை இதைவிட எப்படி சிறப்பாக பழிவாங்க முடியும்.
நான் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு. அதனால் நான் கடுமையாக படித்தேன் இந்த வேலையை பெற்றேன். நம் வாழ்க்கையின் சூழல் குறித்து கவலைப்பட்டு அழுவதினால் எந்த பயனும் இல்லை. நாம் பாய்ச்சலை முன்னெடுக்க வேண்டும். ” என்கிறார் இந்த இரும்புப் பெண்மணி. ஆனி சிவாவுக்கு இப்போது 31 வயதாகிறது. அந்த 8 மாத குழந்தைக்கு இப்போது 13 வயது. தன் மகனுக்கு ஒரு நண்பாக இருந்து வருகிறார். ஆனியின் வெற்றிக்கதை சாதிக்கத்துடிக்கும் பலருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.