வெளிநாட்டிலிருந்து வந்த உதவி ஆட்சியர் சுய தனிமையில் இல்லாமல் சொந்த ஊருக்குச் சென்றதால் வழக்குப் பதிவு

வெளிநாட்டிலிருந்து வந்த உதவி ஆட்சியர் சுய தனிமையில் இல்லாமல் சொந்த ஊருக்குச் சென்றதால் வழக்குப் பதிவு
மாதிரிப் படம்
  • Share this:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட உதவி ஆட்சியர் தனிமையில் இருக்காமல் அவரது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. முக்கிய நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்கள் கட்டாயம் 14 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களே இந்த உத்தரவை மீறிவருகின்றனர்.

அவர்களுடைய பொறுப்பற்ற செயல் அரசு முயற்சிக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது. தற்போது, சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ள உதவி ஆட்சியரை இந்த உத்தரவை மீறியுள்ளார்.


கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த உதவி ஆட்சியர் அனுபம் மிஸ்ரா. அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூரிலிருந்து திரும்பினார். அவரை, மார்ச் 19-ம் தேதியிலிருந்து 14 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்க உத்தரவிட்டிருந்தனர். அவருடைய சோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்றபோது அவர் அங்கு இல்லை. அவரிடம் தொலைபேசியில் பேசும்போது அவர் தனது சொந்த ஊரான கான்பூருக்குச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். உதவி ஆட்சியர் அனுபம் மிஸ்ராவின் செயல் பொறுப்பற்றச் செயல் என்று கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல் நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த அனுபம் மிஸ்ரா, ‘கொல்லத்தில் அவர் தங்கியிருந்த பகுதியில் உணவு கிடைக்காத சூழல் இருந்தது. அதனால் இங்கு வந்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். அவர், மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர், ஏற்கெனவே இரண்டு விதிமுறைகளை மீறியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். முன்னதாக, ஒருமுறை அரசு இல்லத்தின் முகவரியைப் பயன்படுத்தி துப்பாக்கிக்கு உரிமம் வாங்க முயற்சி செய்தார். மேலும், அவருடைய ஓட்டுநரின் பெயரில் பல லோன்களை வாங்கி அதனை திரும்பச் செலுத்தாமல் இருந்தார் என்று புகார் உள்ளது.Also see:
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading