ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் வகுப்புகளைப் புறக்கணித்து இன்று போராட்டம்... மாணவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!

கேரளாவில் வகுப்புகளைப் புறக்கணித்து இன்று போராட்டம்... மாணவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!

வகுப்புகளைப் புறக்கணித்து இன்று மாணவர்கள் போராட்டம்

வகுப்புகளைப் புறக்கணித்து இன்று மாணவர்கள் போராட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன் தொடங்கிவைத்த இந்த பேரணியின்போது, துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், உயர்கல்வித் துறை விவகாரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளாவில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, வகுப்புகளைப் புறக்கணித்து இன்று போராட்டம் நடத்த உள்ளதாக கேரள மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  கேரளாவில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால், உயர்கல்வித் துறை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, தலைமைச் செயலகம் நோக்கி கேரள மாணவர் சங்கம் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது.

  எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன் தொடங்கிவைத்த இந்த பேரணியின்போது, துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், உயர்கல்வித் துறை விவகாரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

  Also see... புதிய மின் இணைப்புக்கு ரூ.10000 லஞ்சம்! கையும் களவுமாக சிக்கிய அதிகாரி

  அப்போது, பேரணியில் சென்றவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், கேரள மாணவர் சங்கத் தலைவர் அலோஷியஸ் சேவியர், துணைத் தலைவர் முகம்மது ஷம்மாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

  இதனால் இன்று கேரளா மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக கேரள மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kerala, Students