Home /News /national /

பள்ளி செல்லும் குழந்தைகளை தெரு நாய்களிடமிருந்து காக்க துப்பாக்கியுடன் வந்த தந்தை... பரபரப்பு சம்பவம்

பள்ளி செல்லும் குழந்தைகளை தெரு நாய்களிடமிருந்து காக்க துப்பாக்கியுடன் வந்த தந்தை... பரபரப்பு சம்பவம்

துப்பாக்கியுடன் நடந்து வந்த தந்தை

துப்பாக்கியுடன் நடந்து வந்த தந்தை

பாதுகாப்பு கருதி லைசன்ஸ் தேவையில்லாத ஏர் கண் பயன்படுத்திய தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது வருத்தமளிக்கின்றது என சமீர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
தெரு நாய்களிடமிருந்து பள்ளி குழந்தைகளை காப்பாற்ற கையில் துப்பாக்கியுடன் நடந்து வந்த தந்தை வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பேக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதுமாக சுமார் 600க்கும் மேற்பட்டோர் நாய்களால் கடிபட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் காசர்கோடு மாவட்டத்தில் பேக்கல் பகுதியில் கதாத் நகரில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தை ஒன்றை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் குழந்தையின் தந்தை சமீர் என்பவர்  தனது மகள் உட்பட 13 குழந்தைகளை தெருநாய்களிடம் இருந்து பாதுகாக்க கையில் ஏர்கன் உடன் குழந்தைகளின் முன்னே நடந்து வந்துள்ளார்.

Also Read : விவசாயிடம் கடன் வசூல் செய்யும் போது விபரீதம் - கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி கொலை

இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பேக்கல் காவல்நிலையத்தில் சமீர் என்பவர் மீது IPC 153 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி லைசன்ஸ் தேவையில்லாத ஏர் கண் பயன்படுத்திய தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது வருத்தமளிப்பட்டகாகவும் இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் சமீர் தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Dog, Kerala

அடுத்த செய்தி