ஐக்கிய அரபு அமீரகம் நிதியைப் பெற மத்திய அரசுடன் ஆலோசனை - பினராயி விஜயன்

ஐக்கிய அரபு அமீரகம் நிதியைப் பெற மத்திய அரசுடன் ஆலோசனை - பினராயி விஜயன்
கேரள முதலவர் பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: August 23, 2018, 11:50 AM IST
  • Share this:
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள நிதியைப் பெறுவதற்காக மத்திய அரசுடன், உயர்மட்ட அளவில் மாநில அரசு ஆலோசனை நடத்தும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் பெய்துவரும் கனமழையால், பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீட்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதியுதவி செய்து வருகின்றனர். மாநில நிவாரணப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்தது.

ஆனால், வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெறுவதில்லை என்ற கொள்கையை நீண்டகாலமாக பின்பற்றிவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்களும் நிதியுதவி செய்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 318 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாகவும் கூறினார். ஐக்கிய அரபு அமீரகம் வழங்க முன்வந்துள்ள 700 கோடி ரூபாயைப் பெறுவதற்காக மத்திய அரசுடன் உயர்மட்ட அளவில் மாநில அரசு ஆலோசனை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
First published: August 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading