எம்.ஜி.ஆர் பாடலை பாடி, புகழ்ந்த கேரளா மாநில ஆளுநர் சதாசிவம்!

எம்.ஜி.ஆர். இல்லம்

மக்களுக்காக அயராது எம்.ஜி.ஆர் உழைத்ததால் தான், அவரை மானசீக தலைவராக தமிழக மக்கள் ஏற்று கொண்டனர் என்று கேரளா மாநில ஆளுநர் சதாசிவம் புகழ்ந்தார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  கேரளா மாநிலம் வடவனூரில் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தை அம்மாநில ஆளுநர் சதாசிவம் இன்று திறந்து வைத்த  பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்  எம்.ஜி.ஆர் பாடலை பாடி, புகழ்ந்து பேசினார்.

  கேரள மாநிலம் வடவனூரில் எம்.ஜி.ஆர் வசித்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இதனை, அம்மாநில ஆளுநர் சதாசிவம் இன்று திறந்து வைத்தார்.

  நிகழ்ச்சியில் பேசிய அவர், “வழக்கறிஞராக நீதிமன்றம் சென்ற முதல் நாளே நான் எம்.ஜி.ஆரிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றேன்.

  அதுமட்டுமில்லாமல், ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா சிறப்பாக செயல்பட எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலே அவருக்கு காரணம்.

  மக்களுக்காக அயராது எம்.ஜி.ஆர் உழைத்ததால் தான், அவரை மானசீக தலைவராக தமிழக மக்கள் ஏற்று கொண்டனர்.

  ‘ஒடி ஒடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’ என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டு, தான் சம்பாதித்த பெரும்பகுதியை மக்களுக்காக எம்.ஜி.ஆர் செலவழித்தார்” என்று சதாசிவம் பேசினார்.

  எம்.ஜி.ஆர் ஆலயங்களை பராமரித்தது போல, எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தையும் பராமரிக்க வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.

  Also Watch: அதிமுக ஊழல் கட்சியா? பதிலளிக்க மறுத்த அன்புமணி | Full Speech

  Published by:Anand Kumar
  First published: