வெள்ள பாதிப்புகளை குறித்து விவாதிக்கக் கூடுகிறது கேரள சட்டமன்றம்

வெள்ள பாதிப்புகளை குறித்து விவாதிக்கக் கூடுகிறது கேரள சட்டமன்றம்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
  • News18
  • Last Updated: August 22, 2018, 9:45 AM IST
  • Share this:
வெள்ளப் பாதிப்புகள் குறித்து விவாதிக்க மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை 30-ம் தேதி நடத்த அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

கேரள வெள்ள சீரமைப்புப் பணிகளுக்காக 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் சிறப்பு நிதியை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி முதல் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால், கேரள மாநிலம் பேரழிவை சந்தித்துள்ளது. உயிரிழப்பு 223-ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், தற்போது மழை நின்றுள்ளதால், வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. கடந்த 100 வருடங்களுக்கு இல்லாத அளவில் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பென்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், வெள்ளப்பாதிப்புகள் குறித்து அமைச்சரவையைக் கூட்டி, முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கேரளாவின் மறுகட்டமைப்புக்காக விரிவான திட்டத்தை தயார் செய்து மத்திய அரசிடம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் மூலம், 2,600 கோடி ரூபாய் சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
First published: August 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading