ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவைச் சேர்ந்த பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் சாலை விபத்தில் படுகாயம்.. திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதி

கேரளாவைச் சேர்ந்த பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் சாலை விபத்தில் படுகாயம்.. திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதி

வாவா சுரேஷ்

வாவா சுரேஷ்

Vava Suresh: விபத்தில் வாவா சுரேஷுக்கும் அவரது டிரைவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதை அடுத்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ்  சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலத்தின் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் தனது டிரைவருடன் செங்கனூர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கேரளா அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் - கொல்லம் நெடுஞ்சாலையில் தட்டத்துமலை என்ற பகுதியில் வைத்து ,கவன குறைவாக சாலையின் ஓரத்தில் இருந்து வந்த கார் ஒன்றை இடிக்காமல் இருப்பதற்காக - வாவா சுரேஷ் இன் டிரைவர் காரை வளைக்க முயன்ற போது கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த கேரளா அதி விரைவு அரசு பேருந்து கார் மீது மோதியுள்ளது.

இதையும் படிக்க: ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிபேடுகள்.. அவசரகால நிலையை சமாளிக்க புதிய திட்டம்!

இந்த விபத்தில் வாவா சுரேஷுக்கும் அவரது டிரைவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதை அடுத்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாம்பு கடித்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Murugesh M
First published:

Tags: Accident, Kerala