Home /News /national /

மாயமான இடுக்கி பெண்.. சமையலறையில் சடலமாக கண்டெடுப்பு - கேரளாவில் நடந்த பயங்கரம்

மாயமான இடுக்கி பெண்.. சமையலறையில் சடலமாக கண்டெடுப்பு - கேரளாவில் நடந்த பயங்கரம்

கேரளா சிந்து

கேரளா சிந்து

கேரளாவின் மாயமானதாக தேடப்பட்டுவந்த பெண்ணை பக்கத்துவீட்டுக்காரர் அடித்து கொலை செய்து புதைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  கேரளாவில் மாயமான பெண் கொலை செய்யப்பட்டு வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

  கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் சிந்து வயது  (44). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி மாயமானார். அவரது இரண்டாவது மகன் 12 வயதான சிறுவன் அம்மாவை  காணவில்லை என உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் அந்தப்பெண்ணை தேடியுள்ளனர். சிந்துவின் தாயார் கடந்த 15-ம் தேதி மகளை காணவில்லை என வெள்ளத்தூவல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

  Also Read:  மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்.. நீதிகேட்கும் இளம்பெண்

  சிந்துவின் தாயார் அளித்த புகாரில், “ சிந்து கணவனை பிரிந்து கடந்த 6 வருடங்களாக பணிக்கன்குடியில் தனது இரண்டாவது மகனுடன் வசித்து வந்தார். அவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிக்குன்னேல் பெனோய் (வயது 48) இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் சிந்து தன் இரண்டாவது மகனுடன் அவரது வீட்டிலே வசிக்கத் தொடங்கிவிட்டார். கடந்த சில தினங்களாக அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. பெனோய் எனது மகளை உடல்ரீதியிலாக தாக்கியுள்ளார். மகளின் மாயமானதற்கு பின்னால் பெனோய் பங்கு இருப்பதாக சந்தேகிப்பதாக’ தெரிவித்திருந்தார்.

  கேரளா சிந்து


  இந்த வழக்கு தொடர்பாக பெனோயிடம் போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பெனோய் தலைமறைவாக இருப்பதால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. சிந்து தன் மகனை பெனோயின் உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளார். மறுநாளில் அம்மாவை காணவில்லை எனச் சிறுவன் சிந்துவின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதால்தான் சிந்து மாயமானதே தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நபரும் மாயமாகிவிட்டார்.

  Also Read:  காதலியின் நிர்வாணப்படத்தை மணமகனுக்கு அனுப்பிய காதலன் - இன்ஸ்டாகிராம் காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

  இதனையடுத்து நேற்று முன்தினம் செப்டம்பர் 3-ம் தேதி சிந்து – பெனோய் வசித்த வீட்டிற்கு சென்று அவரது உறவினர்கள் எதாவது தடயம் இருக்குமா என சோதித்துள்ளனர். அப்போது சமையலறையில் புதிதாக ஒரு அடுப்பு கட்டப்பட்டிருந்தது உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அடுப்பை அகற்றிவிட்டு சிமெண்ட் தரையை உடைத்த போது உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிந்து கொல்லப்பட்டு அவரது சடலம் அங்கு புதைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்


  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றினர்.  சிந்துவின் உடலில் இருந்த ஆடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு பிளாஸ்டிக் கவரில் உடல் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது. மேலும் மோப்ப நாய் வரவழைத்தால் கண்டுபிடிக்காமல் இருக்க அடுப்பின் மீது மிளாய்பொடியை தூவி சென்றுள்ளார். உறவினர்கள் அந்த உடல் சிந்து தான் என அடையாளம் காட்டிய பிறது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், சிந்து சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் மூச்சு விடமுடியாமல் இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து பேசிய சிந்துவின் மூத்த மகன், என் சகோதரன் அம்மா குறித்து பெனோயிடம் விசாரித்த போது புல் எடுக்க வெளியில் சென்றிருக்கிறார் என கூறியுள்ளார். மறுநாள் மீண்டும் விசாரித்தபோது பையில் துணிகளை எடுத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டார் எனக் கூறியுள்ளார். எங்கள் சந்தேகங்களை போலீஸாருக்கு தெரிவித்தோம். அந்த வீட்டில் சமீபத்தில் ஒரு அடுப்பு கட்டப்பட்டிருப்பதாக அறிந்து அதனை தோண்டினோம் அப்போது என் அம்மாவின் சடலம் கிடைத்தது என்றார்.

  இந்த சம்பவம் தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இடுக்கி போலீஸார் விரைவில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது. குற்றவாளியை விரைந்து கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Illegal affair, Kerala, Murder, News On Instagram

  அடுத்த செய்தி