கட்டுன புடவையோட வந்தா போதும்.. வரதட்சணையே வேண்டாம் - கேரள இளைஞரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

நாதஸ்வர இசைகலைஞர் சதீஷ்

வரதட்சணைக்காக மனைவியின் குடும்பத்தினரை அட்டைபோல் உறிஞ்சுபவர்களுக்கு மத்தியில் வரதட்சனையே வேண்டாம் என மணமகள் அணிந்திருந்த நகைகளை கூட மணமேடையிலே திருப்பி தந்த இளைஞன் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

  • Share this:
    கேரளாவில் வரதட்சணை வாங்க மறுத்த இளைஞரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவங்கள்  அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஸ்மயா மருத்துவக்கல்லூரி மாணவி கேரளாவில் அரசுப்பணியில் இருக்கும் நபருக்கு இவருக்கும் பெரியோர்கள் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. வரதட்சனையாக 100 பவுன், 1ஏக்கர் நிலம், கார் என வாங்கிய மாப்பிள்ளை. கார் தனது தகுதிக்கு ஏற்றவாறு இல்லை என சண்டைப்போட்டு மனைவியை கொடுமை செய்து கடைசியில் விஸ்மயா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

    சுசித்ரா தற்கொலைக்கும் வரதட்சனை கொடுமையே காரணம் விஸ்மயா தற்கொலை செய்திக்கேள்விபட்டு தன் மகள் சுசித்ராவை தொடர்புகொண்டு எந்த பிரச்னையா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லுமா தப்பா முடிவு எடுத்துடாதன்னு சொன்னேன் என கதறிய சுசித்ரா தாயின் வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

    வரதட்சணைக்காக மனைவியின் குடும்பத்தினரை அட்டைபோல் உறிஞ்சுபவர்களுக்கு மத்தியில் வரதட்சனையே வேண்டாம் என மணமகள் அணிந்திருந்த நகைகளை கூட மணமேடையிலே அவரது பெற்றோருக்கு திருப்பி தந்த இளைஞன் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். நாதஸ்வர இசைக்கலைஞராக சதீஷ் பூர்வீகம் ஆலப்புழா மாவட்டம் நூரநாடு ஆகும். இவருக்கும் அதேப்பகுதியைச் சேர்ந்த சுருதி என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நிச்சயத்தின் போதே தனக்கு மணமகள் வீட்டார் வரதட்சணையாக எதுவும் கொடுக்க வேண்டாம் என கூறிவிட்டார்.

    இந்நிலையில் சதீஷ்- சுருதி திருமணம் உள்ளூரில் உள்ள கோவிலில் நடந்தது. மாப்பிள்ளை சொன்னால் வெறுங் கழுத்தோடு பெண்ணை எப்படி அனுப்பவது என சுருதிக்கு 50 பவுன் நகைபோட்டுள்ளனர்.  மணப்பெண் சுருதி தன் வீட்டார் கொடுத்த சீதனமான 50 பவுன் நகை அணிந்து மணமேடைக்கு வந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வரதட்சனையே வேண்டாம் எனக் கூறிவிட்டேன். நீ அணிந்திருக்கும் இந்த நகைகளும் வரதட்சணை கணக்கில்தான் சேரும் என மணப்பெண் சுருதியிடம் கூறியுள்ளார். சுருதி விருப்பப்பட்டால் இரண்டு வளையல்கள் மட்டும் அணிந்துக்கொள்ளட்டும் மற்றவை எல்லாம் அவரது குடும்பத்தினரிடம் திருப்பி கொடுத்துவிடட்டும் எனக் கூறிவிட்டார். திருமணம் முடிந்த கையோடு சுருதி அணிந்திருந்த நகைகளை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அவரது குடும்பத்தினரிடமே திருப்பி கொடுத்து விட்டனர்.

    கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளத்தில் வரதட்சனை கொடுமைக்கு பல பெண்கள் பலியாகிக்கொண்டிருக்கும் வேளையில் சதீஷ் செயல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை அனைவரும் பாராட்டுகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: