ஹோம் /நியூஸ் /இந்தியா /

சபரிமலைக்கு சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 8 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

சபரிமலைக்கு சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 8 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

சபரிமலை விபத்து

சபரிமலை விபத்து

சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 44 பக்தர்களுடன் தனியார் பேருந்து ஒன்று சபரிமலைக்கு சென்றுகொண்டிருந்தது. பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய உற்சாகமாக பஜனை பாடியபடி சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.இந்த பேருந்து பத்தனம்திட்ட மாவட்டம் ,  லாஹ அருகே விளக்கு வஞ்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா வில் இருந்து 44 பேருடன் சபரிமலைக்கு சென்ற  தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுவன் மணிகண்டன்  உயிரிழந்தான்.இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் பத்தனம்திட்டா அரசு பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read:  கல்லூரி மாணவிக்கு கட்டாய முத்தம்.. சீனியர்களின் ராகிங் அட்டகாசம்.. போக்சோவில் 5பேர் கைது

பேருந்தின் அடியில் சிக்கிய 3 பேரை நீண்ட நேர முயற்சிக்கு பின் வெளியே எடுத்தனர்.விபத்தில் சிக்கிய பேருந்தை இரண்டு கிரேன்கள் மற்றும் இரு ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பிரேக் செயலிழந்து விபத்து ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Accident, Sabarimalai, Sabarimalai Ayyappan temple