சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி - கொரோனா ரிப்போர்ட் கட்டாயம்

சபரிமலை ஐயப்பன் கோவிவலில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி - கொரோனா ரிப்போர்ட் கட்டாயம்
(கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: August 11, 2020, 12:28 PM IST
  • Share this:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 15-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கொரோனாவை கருத்தில் கொண்டு பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் படி மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... வாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட எண்ணிக்கையில் போதிய இடைவெளியுடனே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading