• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிராக போராட்டம்: இந்து அமைப்பினர் கைது

சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிராக போராட்டம்: இந்து அமைப்பினர் கைது

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் தெரிவித்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி, சபரிமலை கோவிலுக்கு செல்லும் நிலக்கல், எரிமேலி பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குவிந்துள்ளனர். இதையடுத்துஅசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், மாதாந்திர பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதில் பங்கேற்று வழிபாடு நடத்துவதற்காக சபரிமலைக்கு பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். ஆனால் சபரிமலைக்கு செல்லும் நிலக்கல், எரிமேலி பகுதியில் முகாமிட்டுள்ள இந்து அமைப்பினர், அவ்வழியாக வரும் வாகனங்களில் பெண் பக்தர்கள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்புகின்றனர். குறிப்பாக சிறப்பு பூஜை நடைபெற உள்ளதால், இன்று முதல் 5 நாட்களுக்கு பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்து அமைப்பினர் போராட்டத்திற்காக அமைத்திருந்த கூடாரங்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    ALSO SEE...



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: