ஹோம் /நியூஸ் /இந்தியா /

மதுவும் லாட்டரியும் தான் அரசின் வருவாய் என்பது வெட்கக்கேடு - கேரளா ஆளுநர் காட்டம்

மதுவும் லாட்டரியும் தான் அரசின் வருவாய் என்பது வெட்கக்கேடு - கேரளா ஆளுநர் காட்டம்

கேரளா மாநிலத்தின் இரு முக்கிய வருவாய் வழிகளாக மதுவும் லாட்டரியும் தான் உள்ளது என அம்மாநில முதலமைச்சர் ஆரிப் முகமது கான் வருத்ததுடன் புகார் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் ஆளுநராக ஆரிப் முகமது கான் உள்ள நிலையில், ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து வரும் இதற்கு ஆளும் அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

  இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் கண்டன கருத்துக்களை கூறும் நிலையில், அமைச்சர்கள் எல்லை மீறி பேசினால் அவர்களை பதவி நீக்கம் செய்வேன் எனக் கூறி பரபரப்பை கிளப்பினார் ஆரிப் முகமது கான். இந்நிலையில், நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ஆளுநர் ஆரிப் கேரளா அரசை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

  அவர் கூறியதாவது, "கேளரா அரசு மதுபான விற்பனையை ஊக்குவித்து வருகிறது. எல்லா அரசும் மது அருந்துவதற்கு எதிராக பரப்புரை செய்யும் வேலையில் இங்கு மது அருந்துவது ஊக்குவிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் போதைப்பொருள் தலைநகர் என்ற இடத்தை பஞ்சாப் இடம் இருந்து கேரளா பெற்று வருகிறது. மாநிலத்தின் இரு முக்கிய வருவாய் வழிகளாக மதுவும் லாட்டரியும் தான் உள்ளது. இதற்கு நான் வெட்கப்படுகிறேன். மிகவும் ஏழை மக்கள் மட்டுமே லாட்டரி வாங்குகிறார்கள். அரசு ஏழைகளிடம் இருந்து கொள்ளை அடித்து மது அடிமை ஆக்குகிறது." இவ்வாறு அரசு மீது அடுக்கடுக்கான புகார் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: மாஜி அமைச்சர்கள் மீது ஸ்வப்னா சுரேஷ் பாலியல் புகார்.. கேரளா அரசியலில் பரபரப்பு

  பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களான கேரளா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் ஆளுநர் மற்றும் ஆளும் கட்சி இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதலானது தற்போது கேரளாவில் தீவிரமாக தலைத்தூக்கியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Drug addiction, Kerala, Lottery