மதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்

அதேபோல, மற்றொருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்’ என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்
அதேபோல, மற்றொருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்’ என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  • Share this:
கேரளாவில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மதுபானங்கள் கிடைக்காததால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, நாடு முழுவதும் மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
அதனால், குடிக்கு அடிமையானவர்கள் கடும் அவதிப்பட்டுவருகின்றனர். 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 100 மணி நேரம்தான் கடந்துள்ளது. ஆனால், இந்த 10 மணி நேரத்துக்குள்ளாக மதுபானம் கிடைக்காததன் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். மேலும், ஷேவிங் செய்யும் திரவத்தைக் குடித்து உயிரிழந்துள்ளார். கொரோனாவால் கேரளா மிகத் தீவிரமாகப் பாதித்துள்ளது.


சுமார், 180 பேர்வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக எல்லா வகையான மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘மதுபானம் கிடைக்காததன் காரணமாக ஆறு பேர் தற்கொலை செய்துள்ளனர். திரிசூரைச் சேர்ந்த சனோஜ், கொச்சியைச் சேர்ந்த முரளி, கன்னூரைச் சேர்ந விஜில், கொல்லத்தைச் சேர்ந்த சுரேஷ், பிஜூ, கொச்சியைச் சேர்ந்த வாசு ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மதுபானத்துக்கு பதிலாக ஷேவிங் திரவத்தைக் குடித்த கயம்குளம் பகுதியைச் சேர்ந்த நவ்சௌத் என்பவர் உயிரிழந்துள்ளார். அதேபோல, கொல்லத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். அதேபோல, மற்றொருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்’ என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஜான், ‘கேரள சுகாதாரத்துறை அமைச்சர் 2018-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின்படி, 50,000 பேர் ஆல்கஹால் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 10,000 முதல் 15,000 பேர் ஆல்கஹால் குறித்த தீவிர பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சில நாள்களில் இத்தனை உயிரிழப்பு ஏற்பட்டது, முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை உறுதிப்படுத்துகிறது’ என்று தெரிவித்தார்.இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன், ‘ஆல்கஹால் குடிக்காமல் தன்னால் இருக்க முடியாது என்ற சூழல் உள்ளவர்கள் மருத்துவர்களிடமிருந்து உரிய சான்றிதழ் வாங்கி, குறிப்பிட்ட அளவு கலால் துறை மூலம் மதுபானங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த மருத்துவர் ஜான், ‘ஒருவர் ஆல்கஹால் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மட்டும்தான் மருத்துவரால் அடையாளம் காண முடியும். இந்த நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. இந்தக் காலத்தைப் பயன்படுத்தி ஆல்கஹால் பிரச்னையிலிருந்து வெளியேறுவது நல்லது’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading