ஓணம் பண்டிகையின் போது மது விற்பனையில் சாதனை படைத்த கேரளா!

கேரளாவில் அதிகபட்சமாக 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1264.69 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.

news18
Updated: September 13, 2019, 3:50 PM IST
ஓணம் பண்டிகையின் போது மது விற்பனையில் சாதனை படைத்த கேரளா!
கேரளாவில் அதிகபட்சமாக 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1264.69 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.
news18
Updated: September 13, 2019, 3:50 PM IST
ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் ரூ.487 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. செப்டம்பர் 3 முதல் 10-ம் தேதி வரையில் மட்டும் கேரளாவில் ரூ.487 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்தாண்டை விட 3 சதவீதம் அதிகமாகும். 2018-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.457 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது.

மது விற்பனையில் முதல் மூன்று இடங்களை திருச்சூரில் உள்ள இரிஞ்சலகுடா, ஆலப்புழாவில் உள்ள கச்சேரிபாடி ஜங்சன், திருவானந்தபுரத்தில் உள்ள பவர் ஹவுஸ் ரோடு ஆகிய இடங்கள் பிடித்துள்ளன.திருச்சூரில் உள்ள இரிஞ்சலகுடா பகுதியில் ரூ.1.04 கோடி வசூலாகியுள்ளது. இதுவே 2018-ம் ஆண்டு 1.22 கோடி வசூலாகியிருந்தது.

கேரளாவில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்ட சூழலிலும் மது விற்பனை அதிகமாகவே நடந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மட்டும் ரூ.1,229 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது ஜூலை மாதத்தில் நடந்த விற்பனையை விட ரூ.71 கோடி அதிகமாகும்.

கேரளாவில் அதிகபட்சமாக 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1264.69 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.

ALSO WATCH

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...