கேரளாவில் மீண்டும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கேரளாவில் மீண்டும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மழையால் பாதிக்கப்பட்ட கேரளா
  • News18
  • Last Updated: September 24, 2018, 1:55 PM IST
  • Share this:
மழை பாதிப்பிலிருந்து மீண்டும் வரும் கேரளா மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கேரளாவில் ஆகஸ்ட் மாதம் கொட்டித் தீர்த்த கனமழையால், மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 450-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தற்போது மழை பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், பத்தனம்திட்ட, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த 3 மாவட்டங்களுக்கும் வெள்ளத்திற்கான முன்னேற்பாடு எச்சரிக்கையாக யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 6 சென்டி மீட்டர் முதல் 12 சென்டி மீட்டர் வரை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கேரள மாநில பேரிடர் தடுப்பு மேலாண்மை மையம், சம்பந்தப்பட்ட மாவட்ட பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை 25-ம் தேதி கேரளாவின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு 2-ம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் இதேபோல் 26-ம் தேதி பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

First published: September 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading