கேரளாவில்எர்ணாகுளம்உள்ளிட்டபகுதிகளில்மழைகுறைந்ததைத்தொடர்ந்து, மக்களின்இயல்புவாழ்க்கைதிரும்பிவருகிறது. எனினும், அடுத்த 48 மணிநேரத்துக்குமழைநீடிக்கும்எனவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஒரு வாரமாக பெய்துவந்த மழையால், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. 60,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். முதல்கட்ட மதிப்பீட்டின்படி, 8,316 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரியாறு ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த 2 நிவாரண முகாம்கள் மூடப்பட்டதால், மக்கள் வீடுகளுக்கு திரும்பினர். மேலும், நிவாரணப் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 2 நாட்களுக்கு கோயிலுக்கு வர வேண்டாம் என்று சபரிமலை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு நடப்பு ஆண்டில் மட்டும் 160 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published by:செலீனா
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.