கேரளாவில் 2 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் 2 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை!
கேரளாவில் 2 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை
  • News18
  • Last Updated: August 14, 2019, 1:27 PM IST
  • Share this:
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்படுள்ளது. கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 8-ஆம் தேதி முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92-ஆக உயர்ந்தது. காணாமல் போன 52 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் சுமார் இரண்டரை லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


மழை வெள்ளம்


இதனிடையே, முதலமைச்சர் பினராயி விஜயன், வயநாடு, மலப்புரம் பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

கர்நாடகாவில் மழை வெள்ளப் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50- ஆக அதிகரித்துள்ளது. சுமார் 6 லட்சம் பேர் மீட்கப்பட்டு ஆயிரத்து 224 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.விஜயபுரா - சோலாபூர் இடையே கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சி மழை பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் வெள்ள பாதிப்பால் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மறுதினம் சந்தித்து பேச உள்ளதாக கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கனமழைக்கு 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புனே, சோலாபூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 584 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ள மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர்

ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தண்டவாளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால், சாம்பால்பூர் - டிட்லகர் பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

மேலும் படிக்க... நிவாரண முகாமில் உள்ள குழந்தைகளின் சோகத்தை போக்க இளைஞர்கள் முயற்சி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்