கேரளாவில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் - பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்

இன்று வயநாடு தொகுதிக்குட்பட்ட மற்ற பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் ராகுல் காந்தி, நாளை டெல்லி திரும்ப உள்ளார்.

Web Desk | news18
Updated: June 8, 2019, 8:05 AM IST
கேரளாவில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் - பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: June 8, 2019, 8:05 AM IST
நரேந்திர மோடியின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

அண்மையில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி நேற்று கேரளாவுக்கு வருகை தந்தார்.

கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்தியை, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா, உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள காளிகாவு பகுதியில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.


பிரமாண்டமாக நடைபெற்ற ஊர்வலத்தில் திறந்த வாகனத்தில் சென்று ராகுல் காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மழை பெய்த போதும் தொண்டர்கள் உற்சாகம் குன்றாமல் பேரணியில் பங்கேற்றனர்.

அப்போது, சாலையோரத்தில் இருந்த தேனீர் கடையில் ராகுல் தேனீர் அருந்தினார். பேரணியில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த நீங்கள் வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளை தொண்டர்கள் உற்சாகத்துடன் ஏந்தி வந்தனர். வயநாடு தொகுதிக்குட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நன்றி தெரிவிக்கும் பேரணி நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.



முதல் நாளான நேற்று காளிக்காவு பகுதியில் தொண்டர்களிடையே பேசிய ராகுல், மோடி அரசு வெறுப்பு அரசியலை நடத்தி வருவதாகவும் அதை அன்பால் வெல்வோம் என்றும் கூறினார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் கேரளாவின் எண்ணங்களை பிரதிபலிக்க உள்ளதாகவும் ராகுல் உறுதியளித்தார்.

மேலும் தற்போதைய அரசும் நரேந்திர மோடியும் நாட்டில் வெறுப்பு அரசியலை நடத்தி வருகின்றனர். இதனை எதிர்கொள்வதற்கு அன்பு மட்டுமே வழி என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் நிலையில் செயல்பட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இதேபோல, நாட்டில் உள்ள பலவீனமான மக்கள் நரேந்திர மோடியின் கொள்கைகள் மற்றும் நரேந்திர மோடியால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, நிலாம்பூர் பகுதிக்குச் சென்ற ராகுலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்லாது, பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேற்று இரவு வயநாட்டில் தங்கிய ராகுல் இன்று வயநாடு தொகுதிக்குட்பட்ட மற்ற பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை டெல்லி திரும்ப உள்ளார்.

Also see... இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்

Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...