Home /News /national /

கேரள போலிஸ் சட்டத் திருத்தம் தற்போது அமல்படுத்தப்படாது- எதிர்புகளைத் தொடர்ந்து பின்வாங்கிய பினராயி விஜயன்

கேரள போலிஸ் சட்டத் திருத்தம் தற்போது அமல்படுத்தப்படாது- எதிர்புகளைத் தொடர்ந்து பின்வாங்கிய பினராயி விஜயன்

பினராயி விஜயன்.

பினராயி விஜயன்.

கேரளா போலிஸ் சட்டத் திருத்தத்தை நிறுத்திவைப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்குகூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கு உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் ,படங்களை, பதிவேற்றம் செய்தால், பரப்பினால், ஷேர் செய்தால், அல்லது பிரசுரித்தால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் இரு தினங்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்தார்.

    பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கொண்டுவர முயற்சிக்கு இந்தச் சட்டதுக்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்தச் சட்டம் காவல்துறை அதிக அதிகாரத்தைக் கொடுத்து கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரத்தை முடக்கும் என்று எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. அதனையடுத்து, கேரளாவில் கொண்டுவரப்பட்டுள்ள போலிஸ் சட்டம் குறித்து விளக்கமளித்த பினராயி விஜயன், ‘கேரள போலீஸ் சட்டத் திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது அல்ல. ஆன்லைனில் தனிநபர் குறித்து சர்ச்சைக்குள்ளான பதிவுகளை செய்வோரை தண்டிக்கும் 66A பிரிவு உள்ளது.

    இதனை நீக்கிவிட்டு 118A பிரிவில் கேரள அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய கேரள போலீஸ் சட்டத்தின்படி சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இணையங்களில் அவதூறு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க முடியும். அபராதமாக 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும். ஆன்லைனில் அதிகளவிலான அவதூறு புகார்கள் தனது அரசின் கவனத்துக்கு வந்துள்ளதை அடுத்தே இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் கூறியுள்ளார்.

    எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில், ’கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இடது முன்னணி கூட்டணியில் உள்ளவர்களும் கூட இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுபற்றி சட்டப்பேரவையில் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு அனைத்துக் கட்சி கருத்துகளைக் கேட்டபிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Pinarayi vijayan

    அடுத்த செய்தி