கொரோனா 3வது அலை - முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு

கொரோனா வைரஸ்

கேரளாவில் விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

 • Share this:
  தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா 3வது அலையை சமாளிக்க 48 மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

  கேரளாவில் கொரோனா 2வது அலையின் தீவிரம் நீடித்து வருகிறது. அங்கே, கடந்த 24 மணிநேரத்தில் 21,613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 37,24,030 ஆக அதிகரித்துள்ளது. 1,75,167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க 48 மருத்துவமனைகளில் வார்டுகள் மற்றும் ஐ.சி.யூ.க்களை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அங்கே, அடுத்த 3 மாதங்களுக்குள் 60 சதவீத வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் கேரளாவில் குறையாமல் அதிகரித்து வரும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் கூறியுள்ளார்.

  Must Read : மலையாள தாலிபான்கள் - சந்தேகத்தை கிளப்பும் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர்!

  பினராயி விஜயன்


  கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் அங்கே 21,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,24,030 ஆக அதிகரித்துள்ளது. 1,75,167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒரேநாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 18,556 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35,29,465 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: