முகப்பு /செய்தி /இந்தியா / கேரள அரசியல் கொலைகள் : சோசியல் மீடியா அட்மின்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

கேரள அரசியல் கொலைகள் : சோசியல் மீடியா அட்மின்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் சமூக வன்முறை தூண்டும் விதமாக கமெண்டுகள் செய்யப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட அட்மின்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் சமூக வன்முறை தூண்டும் விதமாக கமெண்டுகள் செய்யப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட அட்மின்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் சமூக வன்முறை தூண்டும் விதமாக கமெண்டுகள் செய்யப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட அட்மின்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கேரளாவை உலுக்கிய எஸ்டிபிஐ, பாஜக மாநில நிர்வாகிகள் கொலை சம்பவத்தில், தவறான, வன்முறையை தூண்டும் செய்தியை பரப்பிய சோசியல் மீடியா அட்மின்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சனிக்கிழமையன்று இரவு எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஷான் படுகொலை செய்யப்பட்டார். அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாக பாஜகவின் ஓபிசி பிரிவின் மாநில செயலாளர் ரஞ்சித், வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டார். மாநிலத்தை அதிரச் செய்த இந்த சம்பவங்கள், தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டன. இந்த அரசியல் கொலைகள் தொடர்பாக இரு தரப்பிலும் அடுத்தடுத்து கைதுகள் நடந்து வருகின்றன.

கேரளாவில் பல அரசியல் கொலைகள் நடந்தாலும், அவை மாவட்ட அளவிலான அல்லது அதற்கும் குறைந்த மட்டத்திலானவர்களே கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாநில பொறுப்பில் இருக்கும் இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஆளும் பினராயி விஜயன் அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : சாதிக்க எதுவும் தடையில்லை..! அரசு வேலையில் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

இந்த சம்பவத்தின்போது சமூக வலைதளங்களில் யூகங்கள் அடிப்படையில் சில தகவல்கள் பரவின. அவை பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், தவறான தகவல்கள், வன்முறையை தூண்டும் பதிவுகளை பகிர்ந்த சோசியல் மீடியா பக்கங்களின் அட்மின்கள் மீது வழக்குப்பதிவு செய்ய, மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சில சோசியல் மீடியா அட்மின்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கிறிஸ்துமஸ் முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணம் கிடுகிடு உயர்வு!

குறிப்பாக, ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் சமூக வன்முறை தூண்டும் விதமாக கமெண்டுகள் செய்யப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட அட்மின்கள் மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : வட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு.. ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து நடவடிக்கை

இந்த 2 கொலைகளில் நேரடியாக ஈடுபட்டவர்களை தவிர்த்து, ஆயுத உதவி செய்தவர்கள், செல்போன், வாகன வசதிகள் ஏற்படுத்தி தந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களில் மட்டும் மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை தகவல் அளித்துள்ளது.

First published:

Tags: Kerala