10 வயது சிறுவனின் புகாரை இரண்டே நாளில் முடித்து வைத்த போலீஸ்..! அப்படி என்ன புகார்..?

இதை கேரளா போலீஸ் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ’புகார் தீர்த்து வைக்கப்பட்டது’ என்று போஸ்ட் செய்துள்ளனர்.

10 வயது சிறுவனின் புகாரை இரண்டே நாளில் முடித்து வைத்த போலீஸ்..! அப்படி என்ன புகார்..?
10 வயது சிறுவனின் புகாரை இரண்டே நாளில் முடித்து வைத்த போலீஸ்..!
  • News18
  • Last Updated: November 29, 2019, 3:30 PM IST
  • Share this:
கேரளாவில் 10 வயது சிறுவன் மேப்பையூர் காவல் நிலையத்தில் விசித்திரமான புகாரை அளித்து வியப்படைய வைத்துள்ளார். புகாரைக் கண்டு மனமுருகிய போலீஸ் உடனே அந்தப் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளனர்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் அபின் என்ற சிறுவன் இரண்டு மாதத்திற்கு முன் தன்னுடைய சைக்கிளையும், அண்ணனுடைய சைக்கிளையும் பழுது பார்க்கச் சொல்லி சைக்கிள் கடையில் விட்டுள்ளனர்.

இதற்கு முன் பணமாக 200 ரூபாயும் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட தேதியில் சைக்கிள் வராததால் கடைக்காரருக்கு ஃபோன் செய்துள்ளனர். அவர் விரைவில் கொடுத்துவிடுகிறேன் என்று பதில் கூறியுள்ளார்.


இப்படியாக இரண்டு மாதமாக இந்த பதிலை மட்டுமே கூறியுள்ளார். நேரடியாகக் கடைக்குச் சென்றாலும் கடை எப்போதும் பூட்டியே உள்ளது. வீட்டையும் கண்டு பிடிக்க முடியவில்லை. என்ன செய்வதென திகைத்த அபின் உடனே மேப்பையூர் காவல் நிலையத்திற்கு தன் கைப்பட நோட் பேப்பரில் புகார் எழுதி கொடுத்துள்ளார்.

அதில் எங்களுடைய சைக்கிளை பழுது பார்த்துத் தராமல் ஏமாற்றுகிறார். அவரிடம் விரைந்து பழுது பார்க்கச் சொல்லி எங்களுடைய சைக்கிளை வாங்கித் தாருங்கள் என்று கேட்டுள்ளார் சிறுவன் அபின். இதைக் கண்டு வியப்படைந்த போலீசார் உடனே அந்தக் கடைக்கு விரைந்து விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது அருகில் இருந்த கடைக்காரர்கள் “அவர் எப்போதாவதுதான் கடையை திறப்பார். அவருடைய மகன் திருமணத்தில் பிஸியாக உள்ளார் என்று கூறியுள்ளனர்.

பின் அவருடைய வீட்டை கண்டறிந்து சைக்கிளை உடனே பழுது பார்த்துத் தரச்சொல்லி அதை நேற்று அபினிடம் கொடுத்துள்ளனர். இதை கேரளா போலீஸ் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ’புகார் தீர்த்து வைக்கப்பட்டது’ என்று போஸ்ட் செய்துள்ளனர். அபினும் மகிழ்ச்சியோடு சைக்கிளுடன் புகைப்படம் எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

 
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்