Home » News » National » KERALA POLICE DEPARTMENT GETS FEEDBACK FROM COMPLAINANTS AND RELAXED POLICE CONTROL RULE ON LOCATION MG

எல்லா காவல்நிலையமும் உங்களுடையது... கேரள காவல்துறையின் அதிரடி அணுகுமுறைகள்!

எல்லா காவல்நிலையமும் உங்களுடையது... கேரள காவல்துறையின் அதிரடி அணுகுமுறைகள்!
கேரள டிஜிபி லோக்நாத் பெஹெரா
  • Share this:
மக்களால் எளிமையாக அணுகக்கூடியதாகவும், இயல்பாகவும் காவல்துறை செயல்பாடுகளில் புதுமையைப் புகுத்தியுள்ளது கேரள காவல்துறை.

பொதுவான வழக்கமாக, குற்றம் எங்கு நடந்தாலும், அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் காவல்துறையில் புகார் செய்ய வேண்டும் என்பதுதான் பொதுவிதி. இப்போது எந்த காவல்துறையில் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார், தொடர்புடைய எல்லைக் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

பெண் காவலர் என அழைக்கும் முறையை அடியோடு ரத்துசெய்து அறிவித்துள்ளது கேரள காவல்துறை. பெண் காவலர், பெண் உதவி ஆய்வாளர், பெண் ஆய்வாளர் இனி இப்படி அழைக்கப்படமாட்டார்கள். பாலின பேதத்தை தோற்றுவிக்கும் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெண் போலீஸாரை சிவில் போலீஸ் ஆபீஸர் எனவும், பெண் போலீஸ் அதிகாரிகளை சீனியர் சிவில் போலீஸ் ஆபீஸர் எனவும் அழைக்கப்பட வேண்டும் என டிஜிபி லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டிருக்கிறார்.


புகார் அளிக்கும் பொதுமக்களிடம் உயர் காவல் துறை அதிகாரிகள் தொலைபேசி மூலமாக அழைத்து கருத்துக்கள் கேட்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிபி லோக்நாத் பெஹெரா,”காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் பொது மக்களை, மாவட்ட எஸ்பி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார். காவல் நிலையத்தில் மனுதாரர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்தும், செயல்பாடுகளின் திருப்தி குறித்தும் அறிந்துகொள்வார்.

கேரளத்தின் அனைத்து மாவட்ட எஸ்பிக்களும், புகார் அளித்த 10 பேரை ஃபோனில் தொடர்புகொண்டு இந்த விபரங்களைக் கேட்பார்கள். காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் உடனடியாக ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்படுகிறது. போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இது மக்களின் புகார் அளிக்கும் தயக்கத்தையும், நட்பான ஒரு அணுகுறையையும் ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Also See...

 

 
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading