கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கிக்கொண்ட மூன்று தமிழர்களும் நலமுடன் உள்ளனர்: மலப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர்  நலமாக உள்ளதாக மலப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

  • Share this:
துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில், இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் நலமுடன் உள்ளனர்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள் உட்பட 190 பேர் பயணித்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று இரவு 7.40 மணிக்கு விமானம் தரையிறங்கும் போது, திடீரென ஓடுதளத்திலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. விபத்தில் சிக்கி விமானி தீபக் வசந்த், 2 வயது குழந்தை உட்பட 18 பேர் உயிரிழந்தனர். 10 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த 150க்கும் மேற்பட்டவர்கள் கோழிக்கோட்டில் உள்ள 7 மருத்துவமனைகளிலும், மலப்புரத்தில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தார். மீட்புப் பணிகளை மேற்கொள்ள டெல்லி, மும்பையில் இருந்து 2 விமானங்கள் கோழிக்கோடு வந்தடைந்தன.


கேரளாவில் கனமழை காரணமாக போதிய வெளிச்சமில்லாமல் இருந்த நிலையில், ஓடுதளம் முழுமைக்கும் விமானம் சென்று பள்ளத்தில் விழுந்ததாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர், ஆளுநர் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இதனிடையே நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன், விமான விபத்தில் சிக்கிய நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த 3 பேரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

விமான விபத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் குறித்து அறிய கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. 0495 2376901 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, 0483 - 2719493 எனும் உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது.

கேரள விமான விபத்து சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading