கேரளா மாநிலம் திருச்சூர் வெள்ளிகுளங்கர இஞ்சக்குண்டு பகுதியைச் சேர்ந்த குட்டன், சந்திரிகா ஆகிய இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன் அனீஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சூரில் உள்ள வெள்ளிகுளங்கர, இஞ்சக்குண்டு என்ற இடத்தில் காலை 8.30 மணியளவில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. முற்றத்தில் மாமர கன்று நட்டுக்கொண்டிருந்த குட்டன், சந்திரிகா ஆகியோரிடம் மகன் அனீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், அனீஷ் இருவரையும் மண் வெட்டி யால் சரமாரியாக தாக்கிய போது இருவரும் தப்பி ஓட முயன்றனர்.
அப்போது வீட்டில் இருந்த அரிவாளுடன் ஓடிய அனீஷ், இருவரையும் சரமாரியாக வெட்டினார்.இதில் குட்டனும் ( 60 ) , சந்திரிகாவும் ( 55 ) கழுத்தில் ஆழமாக வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர். இந்த கொலை குறித்து அனீஷ் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.
மேலும் படிக்க: பொது கழிப்பறையில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!
போலீசார் வருவதற்குள் அனீஷ் ( 30 ,) அங்கிருந்து பைக்கில் தப்பித்து சென்றுவிட்டார். அனீஷ்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையே முன்பும் அடிக்கடி தகராறு, வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். திருச்சூர் ரூரல் எஸ்பி ஐஸ்வர்யா டோக்ரே உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆய்வு செய்தனர். . குற்றவாளியை பிடிக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.