Home /News /national /

Kuthiran Tunnel | குதிரன் சுரங்கப்பாதை திறப்பு: கோவையிலிருந்து கேரளா செல்வோர் ஹேப்பி!

Kuthiran Tunnel | குதிரன் சுரங்கப்பாதை திறப்பு: கோவையிலிருந்து கேரளா செல்வோர் ஹேப்பி!

Kuthiran Tunnel Kerala

Kuthiran Tunnel Kerala

2016ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வடக்கன்சேரி - மன்னூத்தி மார்க்கத்தில் வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் 1.6 கிமீ நீள இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியானது தொடங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கேரளாவின் முதல் சாலைமார்க்க சுரங்கப்பாதையான குதிரன் சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதால், கோவையிலிருந்து கேரளா செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்வோர் வாளையாறு சோதனைச் சாவடியை கடந்து சென்றால் மன்னூத்தி எனும் பகுதி வரும். மலைப்பாங்கான மற்றும் குறுகிய பகுதி என்பதால் இந்த வழியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும். மேலும் ஆபத்தான வளைவுகளை கொண்டிருந்ததால் அடிக்கடி சாலை விபத்துக்களும் ஏற்பட்டு வந்தது.

இது தவிர கேரளாவிலிருந்து தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய பொருளாதார வழித்தடமாகவும் மன்னூத்தி விளங்கி வருகிறது. எனவே மலையளவு பாரம் சுமந்து செல்லும் பெரிய லாரிகள் மலைப்பாங்கான இந்த பகுதியை மிகவும் மெதுவான வேகத்திலே கடந்து செல்ல முடியும், இதன் காரணமாக வாகன நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வந்தது.

Also Read:   அரசு வேலை, விசா, பாஸ்போர்ட் பெற முடியாது.. தேசிய விரோதிகளுக்கு எதிராக கிடுக்கிப்பிடி..!

இந்த நிலையில் பீச்சி - வாழஹனி வனவிலங்கு சரணாலய பகுதியில் மலையை குடைந்து இரண்டு சுரங்க வழிகளில் (செல்வதற்கும், வருவதற்கும்) சாலை அமைக்க முடிவானது. 2016ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வடக்கன்சேரி - மன்னூத்தி மார்க்கத்தில் வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் 1.6 கிமீ நீள இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியானது தொடங்கப்பட்டது. முதலில் 641 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தின் செலவு என மதிப்பிடப்பட்டிருந்தது, எனினும் 2019ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டட்தில் கீழ் இத்திட்டத்தின் அப்போதைய மதிப்பு 1300 கோடி ரூபாயை கடந்ததாக தெரியவந்தது.

Kuthiran Tunnel - Kerala


இந்நிலையில் பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஒரு வழிப் பாதை பணிகள் முடிவடைந்து தற்போது குதிரன் சுரங்கப்பாதை பொதுப் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

Also Read:   கட்டாய கொரோனா பரிசோதனைக்கு அஞ்சி ஒரு வழிச்சாலை வழியாக தப்பிச் செல்லும் வாகன ஓட்டிகள்!

இந்த ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் நேற்று (ஜூலை 31) தகவல் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்குனரிடமிருந்து திருச்சூர் மாவட்ட ஆட்சியரான ஹரிதா வி.குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரும், காவல் ஆணையரான ஆதித்யாவும் சுரங்கப்பாதையை நேற்று மாலை திறந்து வைத்து முதலில் அந்த வழியாக பயணம் செய்தனர்.மற்றொரு சுரங்கப்பாதையின் பணிகள் முடிக்கப்பட்டு வரும் டிசம்பரில் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குதிரன் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளதால் கோவையில் இருந்து கேரளா செல்வோர் இனி சுரங்கப்பாதை வழியாக பயணிக்க முடியும். இதுவே கேரளாவின் முதல் சுரங்கப்பாதை என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கியமான இந்த நிகழ்ச்சி எந்த வித ஆடம்பரங்களும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக நடத்தப்பட்டிருக்கிறது. எனினும் மாநில அமைச்சர்களுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்திருக்கிறது. இது குறித்து பேசிய அம்மாநில அமைச்சர்கள் ரியாஸ் மற்றும் ராஜன் ஆகியோர் முறையான அழைப்பு என்பதை எதிர்பார்க்கவில்லை சுரங்கப்பாதை திறக்கப்படவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இரண்டாவது சுரங்கப்பாதையும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்றனர்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Kerala, Thrissur

அடுத்த செய்தி