• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 'கேரளாவுக்குள்ளும் வரக்கூடாது.. வெளிநாட்டுக்கும் போகக்கூடாது' - ஃபிராங்கோவுக்கு ஜாமின்

'கேரளாவுக்குள்ளும் வரக்கூடாது.. வெளிநாட்டுக்கும் போகக்கூடாது' - ஃபிராங்கோவுக்கு ஜாமின்

பிஷப் ஃபிராங்கோ முலக்கல்

பிஷப் ஃபிராங்கோ முலக்கல்

பேராயர் ஃபிராங்கோ முலக்கலுக்கு இரண்டு முறை ஜாமின்

  • News18
  • Last Updated :
  • Share this:
    கேரளாவில் கன்னியாஸ்திரி அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ முல்லக்கல் கேரளாவில் நுழையக்கூடாது என்று கூறி கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

    பேராயர் ஃபிராங்கோ முலக்கல் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். அதன்பிறகு பேராயர் பிராங்கோவை கைது செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைக்காக முலக்கல் திருப்புனித்துராவில் உள்ள கேரள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் செப்டம்பர் 20-ம் தேதி பேராயர் ஃபிராங்கோ முலக்கல் ஆஜரானார். சுமார் 15 மணிநேரம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் பேராயர் அளித்த தகவல்களின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். விசாரணையின் இறுதியில் பேராயர் ஃபிராங்கோ முலக்கல்லை காவல்துறையின் சிறப்பு விசாரணை குழு கைது செய்தது.



    அதன்பின் எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் முன்னதாக ஜாமின் கேட்டு பிராங்கோ மனு அளித்திருந்த நிலையில், அனைத்து அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஜாமின் கோரிய மனு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், பேராயர் ஃபிராங்கோ முலக்கல் இனி கேரளாவில் நுழையக்கூடாது என்றும், அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமினை வழங்கினர்.

    ALSO WATCH...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: