பாலியல் கொடுமைக்கு நீதி கேட்டு போப்பிடம் முறையிட்ட கன்னியாஸ்திரி!

news18
Updated: September 12, 2018, 3:27 PM IST
பாலியல் கொடுமைக்கு நீதி கேட்டு போப்பிடம் முறையிட்ட கன்னியாஸ்திரி!
பிஷப் பிராங்கோ
news18
Updated: September 12, 2018, 3:27 PM IST
பாலியல் புகார் குறித்து கேரளா கன்னியாஸ்திரி வாடிகனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் செயல்படும் சீரோ மலபார் சபையின்

பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் குருவிலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். கோட்டயத்திற்கு அந்த பி‌ஷப் வந்தபோது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர், போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரள தனிப்படை போலீசார் ஜலந்தர் சென்று பி‌ஷப்பிடம் இந்தப் புகார் பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

இதனால் பாலியல் புகார் கூறப்பட்ட பி‌ஷப் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னியாஸ்திரிகள்


இந்த நிலையில் பி‌ஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமான வாடிகனில் உள்ள போப் ஆண்டவரின் அலுவலகத்திற்கு இது தொடர்பாக புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
Loading...
இங்கு பெண்கள் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகின்றனர். என்னை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி நான், ஏற்கனவே உங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். ஆனால் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போலீசில் புகார் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தனக்கு தேவைப்படும் கன்னியாஸ்திரிகளை நிர்பந்தப்படுத்தியோ அவர்களது பலவீனத்தை பயன்படுத்தியோ பி‌ஷப், தனது ஆசைக்கு இணங்க வைப்பது வழக்கம். அவர் பல கன்னியாஸ்திரிகளிடம் தவறாக நடந்துள்ளார்.


கடந்த 5 ஆண்டுகளில் பி‌ஷப்பின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாக 20-க்கும் அதிகமான கன்னியாஸ்திரிகள் சபையில் இருந்து வெளியேறி உள்ளனர். பி‌ஷப்பால் பலமுறை நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோதும், அதை உடனே வெளியே சொல்லாததற்கு மிகுந்த பயமும், அவமானமும் தான் காரணம். எனது குடும்பத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் இருந்தது என்று கூறியுள்ளார்.

சபையில் பெண்களுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும் நீதியை உறுதிப்படுத்தும் சட்டம் ஏதாவது உண்டா? அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பயந்து பாதிப்பு குறித்து வெளியே சொல்லாமல் பயந்து வாழும் கன்னியாஸ்திரிகள் பலர் உள்ளனர். இவைகளை சபை கண்டு கொள்ளாமல் இருந்தால் சபை மீதான மக்களின் நம்பிக்கை அழிந்துவிடும். எனவே, பிராங்கோவை பி‌ஷப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று  கூறியுள்ளார்.

தன் மீது கூறப்பட்டுள்ள புகாரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்


இந்தப் புகார் ஆதாரமற்றவை என்றும், அது தொடர்பான விசாரணையை சந்திக்க தான் தயாராக உள்ளேன். அந்த கன்னியாஸ்திரி என்னிடம் பல தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். அது நடக்காததால் தற்போது எனது மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பொய் புகார் கூறியுள்ளார். குற்றம் நடந்ததா? என்பது புகார் தெரிவித்தவர், நான், கடவுள் ஆகிய 3 பேருக்குதான் தெரியும் என்று அவர் கூறினார்.

பாலியல் புகாரில் சிக்கி உள்ள பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த 4 கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டுள்ளதால் இந்தப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் பி‌ஷப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி உள்ளனர். அதில் பி‌ஷப்பை உடனே கைது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பி‌ஷப்பை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...