முகப்பு /செய்தி /இந்தியா / பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல் ஜாமீன் மனு நிராகரிப்பு

பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல் ஜாமீன் மனு நிராகரிப்பு

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராயர் ஃபிரான்கோ முல்லக்கல் ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

பி‌ஷப் ஃபிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் குருவிலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். கோட்டயத்திற்கு அந்த பி‌ஷப் வந்தபோது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வாடிகனில் உள்ள போப் ஆண்டவரின் அலுவலகத்திற்கு புகார் கடிதமும் அவர் எழுதினார். இதனை தொடர்ந்து பிஷப் செப்டம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கன்னியாஸ்திரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிஷப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.  இந்நிலையில் பிஷப் ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம்   நிராகரித்து உத்தரவிட்டது.

First published:

Tags: Bail rejected, Franco Mulakkal, Kerala, Kerala Nun Rape Case, Vatican