ஹோம் /நியூஸ் /இந்தியா /

உலக திருநங்கை அழகிப் பட்டம் வென்ற கேரளாவின் ஸ்ருதி சித்தாரா

உலக திருநங்கை அழகிப் பட்டம் வென்ற கேரளாவின் ஸ்ருதி சித்தாரா

Sruthi Sithara

Sruthi Sithara

மிஸ் திருநங்கை போட்டியில் ஸ்ருதி சித்தாரா பட்டம் வென்றுள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் பெற்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா, உலக திருநங்கை அழகிப் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலகளவில் பெண்களுக்கென அழகிப் போட்டி நடைபெறுவது போல திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. கொரோனா காரணமாக நேரடியாக இல்லாமல் ஆன்லைன் வாயிலாக இந்த போட்டி நடத்தப்பட்டது. கடந்த 6 மாதங்களாக இந்த போட்டி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வந்தது. இந்தியா சார்பாக இப்போட்டியில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா (வயது 25) இப்போட்டியில் மிஸ் டிரான்ஸ் குளோபல் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றிருக்கிறார். இந்தியர் ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மிஸ். திருநங்கை பட்டம் வென்றதற்கான விருது ஸ்ருதி சித்தாராவுக்கு ஆன்லைன் முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் சித்தாராவிற்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தாரா Most Eloquent Queen என்ற பட்டத்தையும் இதே போட்டியில் வென்றிருக்கிறார்.

Also read:  திடீரென குறைந்த ட்விட்டர் ஃபாலோயர்ஸ்... குழம்பிய யூஸர்கள்.. காரணம் இதுதான்!

மிஸ் திருநங்கை போட்டியில் ஸ்ருதி சித்தாரா பட்டம் வென்றுள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் பெற்றனர்.

கேரளாவில் வைக்கோம் பகுதியைச் சேர்ந்த சித்தாரா மிஸ். திருநங்கை விருது வென்றது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளேன். இப்படி ஒரு பட்டத்தை வெல்வேன் என எதிர்பார்க்கவே இல்லை. இந்த போட்டியில் சிறப்பாக என்னை வெளிப்படுத்த வேண்டும் என மாதக்கணக்கில் தயாராகி வந்தேன். இறுதியாக பட்டத்தையே வென்றுள்ளேன். முதல் ஐந்து இடங்களில் வருவேன் என கருதினேன் ஆனால் பட்டத்தை வென்றது எதிர்பாராதது.” என தெரிவித்துள்ளார்.

Also read:  சொந்த நாட்டு பிரதமரையே அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் தூதர் - இம்ரான் கானுக்கு தலைகுனிவு

மேலும் தனது பட்டத்தை காலம் சென்ற தனது தாயாருக்கும், அவரின் நண்பரும் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட முதல் ரேடியோ ஜாக்கியுமான அனன்யா குமாரி அலெக்ஸிற்கும் சமர்ப்பித்ததாக தெரிவித்தார். கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை குளருபடியால் ஏற்பட்ட உடல் பிரச்னைகளால் அனன்யா சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி சித்தாரா, மாடலாகவும், நடிகையாகவும் இருக்கிறார். இவர் கேரள அரசின் திருநங்கை முன்னேற்ற பிரிவிலும் பணியாற்றிருக்கிறார்.

Published by:Arun
First published:

Tags: Kerala, Transgender