முகப்பு /செய்தி /இந்தியா / மகள்களுக்காக 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி.. மகளிர் தினத்தில் சுவாரஸ்யம்..!

மகள்களுக்காக 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி.. மகளிர் தினத்தில் சுவாரஸ்யம்..!

29 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி

29 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி

கேரளாவில் ஒரு இஸ்லாமிய தம்பதி 29 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு கவனத்தை பெற்றுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

நாடு முழுவதும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்த தினத்தில் தனது 3 மகள்களின் நலனுக்காக ஒரு பெற்றோர் 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 53 வயதான சுக்கூர். இவர் திரைப்பட நடிகராகவும் வழக்கறிஞராகவும் உள்ளார். இவர் ஷீனா என்ற பெண்ணை 1994இல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜெபின், பாத்திமா ஜோசா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இஸ்லாமியர்களான சுக்கூர், ஷீனா அப்போது தங்கள் திருமணத்தை இஸ்லாமிய தனிநபர் ஷரியத் முறைப்படி செய்துகொண்டனர். இந்த சட்டப்படி ஆண் வாரிசு இல்லாத சுக்கூரின் சொத்துக்கள் மகள்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி, ஆண் வாரிசு இல்லாத சுக்கூரின் சொத்துக்களில் மூன்றில் இரு பங்குகள் தான் 3 மகள்களுக்கும் செல்லும். எஞ்சிய ஒரு பங்கு சுக்கூரின் சகோதரர்களுக்கு தான் செல்லும்.ஆனால், சுக்கூருக்கு இதில் விருப்பமில்லை.

தனது சொத்துக்கள் அனைத்தும் மகள்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என நினைத்துள்ளார். எனவே, இவரும் இவரது மனைவியும் கேரளா சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமண சட்டத்ததின் படி மீண்டும் திருமணம் செய்துகொண்டனர். பெண்கள் தினமான நேற்று தங்கள் மகள்களுக்கு அன்பு பரிசு தரும் விதமாக தங்கள் திருமணத்தை ஹோஸ்துர்க் சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த தம்பதி செய்துகொண்டனர். இதில் மூன்று மகள்களும் பங்கேற்ற நிலையில், திருமணம் முடிந்த பின் கேக் வெட்டி சாப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தனது திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த சுக்கூர், என் வாழ்நாள் சேமிப்பு மூன்று குழந்தைகளுக்கு தானே செல்ல வேண்டும். அதில் என்ன சந்தேகம். அவர்களுக்கு தான் செல்ல வேண்டும். இப்போது கிடைக்கும் என்று கூறி பதிவிட்டுள்ளார். சுக்கூரின் இந்த செயலுக்கு பலரும் பாரட்டி வரும் நிலையில், சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

First published:

Tags: Islam, Kerala, Marriage, Muslim