• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புருனே மன்னனுக்கு கிரீடம் விற்பனை...ரூ.70,000 கோடிக்கு வரி கட்டணும்: ஹைடெக் மோசடி மன்னன் சிக்கியது எப்படி?

புருனே மன்னனுக்கு கிரீடம் விற்பனை...ரூ.70,000 கோடிக்கு வரி கட்டணும்: ஹைடெக் மோசடி மன்னன் சிக்கியது எப்படி?

மோன்சன் மாவுங்கல்

மோன்சன் மாவுங்கல்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மோன்சன் மாவுங்கல் இப்போது பல கோடி ரூபாய்க்கான பங்களாக்களுக்கும், சொத்துகளுக்கும் அதிபதியாக உள்ளார்.

  • Share this:
    புருனே சுல்தானிடம் கிரீடம் விற்ற வகையில் 70,000 கோடி ரூபாய் வரவேண்டி உள்ளது என்றும் அதற்கு வரி செலுத்துவதற்காக பணம் தேவைப்படுவதாக கூறி மோசடியில்  ஈடுபட்ட  ஹைடெக் மோசடி மன்னன் மோன்சன் மாவுங்கல் என்பவரை கேரள போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் தொல் பொருட்களை விற்பனை செய்துவருவதாகவும், பழங்கால பொருட்களை சேகரிப்பவராகவும் கூறிக்கொண்டு வலம்வந்தார். இந்த நிலையில் சேர்த்தலை பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் மோன்சன் மாவுங்கல் தன்னிடம் இருந்து 6.27 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து குற்றப் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் புருனே சுல்தானின் கிரீடம் விற்ற வகையில் 70,000 கோடி ரூபாய் வரவேண்டி உள்ளது. அதற்கு வரி செலுத்துவதற்காக பணம் தேவைப்படுவதாக மோன்சன் மாவுங்க சில ஆதாரங்களை காட்டி பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. தற்போது பணம் கொடுத்தால் அதற்கு பதிலாக வட்டி இல்லாமல் நூறு கோடி ரூபாய் வங்கி லோன் வாங்கிதருவதாக கூறியதுடன் அதற்கான வங்கி ஆவணங்கள் சிலவற்றையும் காட்டியிருக்கிறார்.

    இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திய போலீஸார் மோன்சன் மாவுங்கல்லை கைது செய்துள்ளனர். மோன்சன் மாவுங்கல்லிடம் இருந்து ஆடம்பர கார்கள், கேரவன்கள் என 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தன்னிடம் இரிடியம் போன்ற உலோகம் இருப்பதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.



    மேலும் பழங்கால பொருட்கள் பலவும் தன்னிடம் இருப்பதாக கூறி பல பணக்காரர்களை ஏமாற்றி கோடிகளை சுருட்டியுள்ளார் மோன்சன் மாவுங்கல். இதுகுறித்து சிலர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் புகார் அளித்துள்ளனர்.அதில்,  வங்கியில் லாக்காகியுள்ள 2.62 லட்சம் கோடி ரூபாயை மீட்பதற்கான செலவுக்கு பணம் வேண்டும்  என்று  மோன்சன் மாவுங்கல் ஏமாற்றியதாக  முதல்வரிடம் புகார் அளித்த ஆறு பேர் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஹெராயின் கடத்தலில் அதானி துறைமுகத்துக்கு லாபம்? விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!


    மோன்சன் தனியாக மியூசியம் ஒன்று வைத்துள்ளார். அதில் பல வி.வி.ஐ.பி-க்கள் வந்து சென்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா என அந்தப் பட்டியல் நீளமானது. மியூசியத்தில் வி.வி.ஐ.பி-க்கள் இருப்பது போன்ற புகைப்படங்களை பலரிடம் காட்டி தன்னிடம் இருப்பவை அனைத்தும் பழங்கால பொருட்கள்தான் என நம்பவைத்துள்ளார்.

    மேலும் படிக்க: கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபீஸ் தடுப்பூசியைக் குத்திய மருத்துவமனை


    அதுமட்டுமல்லாது டி.ஜி.பி, முன்னாள் அமைச்சர்கள் போன்ற முக்கிய புள்ளிகள் தனக்கு நெருக்கமானவர்கள் எனக்கூறி பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார். அவரது மியூசியத்தில் உள்ள பழங்கால பொருட்கள் எனக் கூறப்படும் பொருட்களை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மோன்சன் மாவுங்கல் இப்போது பல கோடி ரூபாய்க்கான பங்களாக்களுக்கும், சொத்துகளுக்கும் அதிபதியாக உள்ளார். அவரது சொத்துக்களை கணக்கிடும் படலத்தில் உள்ளது கேரள கிரைம் பிரான்ச் போலீஸ்.

    செய்தியாளர்: சஜயகுமார்- கன்னியாகுமரி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: