Home /News /national /

மாடல் அழகியை ஃபோட்டோஷூட் என வரவழைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல் - பெண் உடந்தை

மாடல் அழகியை ஃபோட்டோஷூட் என வரவழைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல் - பெண் உடந்தை

Representational image

Representational image

லாட்ஜின் ஓனரான கிறிஸ்டீனா மூலம் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்ததால் அந்த மாடல் அழகி தனது ரூமில் மயக்க நிலைக்கு சென்றிருக்கிறார்.

ஃபோட்டோஷூட் செய்ய அழைத்து வரப்பட்ட மாடல் அழகி, லாட்ஜில் அடைத்து வைத்து மூன்று நாட்களாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

25 வயதாகும் மாடல் அழகி ஃபோட்டோஷூட்காக வந்திருந்த நிலையில் அவருக்கு குளிர்பானத்தில் போதை மருந்துகளை கலந்து கொடுத்து கூட்டு பாலியல் செய்ததுடன் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டியுள்ளனர்.

கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த மாடல் அழகியை அவருக்கு அறிமுகமான சலீம் (வயது 33) என்பவர் ஃபோட்டோஷூட் செய்வதற்காக கொச்சிக்கு அழைத்துள்ளார். மலப்புரத்தில் இருந்து மாடல் அழகி கொச்சிக்கு கடந்த நவம்பர் 28ம் தேதி வந்த நிலையில், அவரை காக்கநாட் எனும் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள கிறிஸ்டீனா ரெசிடென்சி என்ற லாட்ஜில் தங்கவைத்திருக்கிறார் சலீம்.

இரண்டு நாட்கள் ஃபோட்டோஷூட் செய்த நிலையில், இரவு தனது ரூமுக்கு வருமாறு சலீம் அழைத்துள்ளார். மேலும் தனது ஃபோனில் இருந்த சில மாடல் அழகிகளின் செக்ஸ் வீடியோக்களை காட்டி, இவர்கள் எல்லாம் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். நீயும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நிர்பந்திருக்கிறார். அந்தப் பெண் இதற்கு மறுக்கவே, அவர்களின் கோரமுகம் வெளிப்பட்டிருக்கிறது. அந்த லாட்ஜின் ஓனரான கிறிஸ்டீனா மூலம் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்ததால் அந்த மாடல் அழகி தனது ரூமில் மயக்க நிலைக்கு சென்றிருக்கிறார்.

Also read:  கர்ப்பிணி அக்காவின் தலையை துண்டாக்கி செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய தம்பி - கொடூரம்

இதனையடுத்து மாடல் அழகியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த சலீம் அவரின் நண்பர்கள் அஜ்மல் மற்றும் ஷமீர் ஆகியோர் சேர்ந்து மாடல் அழகியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, இச்சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியிருக்கின்றனர். மேலும் அந்த மாடல் அழகியை டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அந்த லாட்ஜில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து வந்திருக்கின்றனர்.

3 absconding in gang rape of model in Kakkanad: one held | model gang raped  in kakkanad| kerala news| kakkanad model photoshoot sexaul assault
சலீம்


இருப்பினும், அங்கிருந்து எப்படியோ தப்பித்த அந்தப் பெண் இது குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் லாட்ஜ் ஓனர் மற்றும் மூவர் மீது புகார் அளித்திருக்கிறார். கேரளாவை அதிரச் செய்திருக்கும் இந்த விவகாரத்தில் போலீசார் மீது அந்த இளம் பெண் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். முதலில் காவல்நிலையம் சென்ற போது போலீசார் தனக்கு ஒத்துழைப்பு வழங்காமல் லாட்ஜ் ஓனர் கிறிஸ்டினாவுக்கு ஆதரவளிப்பது போல நடந்து கொண்டதாக கூறியுள்ளார். போலீசார் காலதாமதம் செய்ததால் தான் தங்கியிருந்த அறையில் இருந்த தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றனர்.

எனினும், குற்றச்சாட்டுகளை மறுத்த போலீசார் அந்த லாட்ஜை மூடி சீல் வைத்திருக்கின்றனர். கிறிஸ்டினா உள்ளிட்ட நால்வர் தலைமறைவாக இருந்த நிலையில் சலீமை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Gang rape, Kerala, Rape

அடுத்த செய்தி