Home /News /national /

எம்.எல்.ஏ-வை கரம்பிடித்த இந்தியாவின் இளம் மேயர்.. திருமணத்தை நடத்தி வைத்த கேரள முதல்வர்

எம்.எல்.ஏ-வை கரம்பிடித்த இந்தியாவின் இளம் மேயர்.. திருமணத்தை நடத்தி வைத்த கேரள முதல்வர்

 இளம்  மேயர் ஆர்யா ராஜேந்திரன் திருமணம்

இளம்  மேயர் ஆர்யா ராஜேந்திரன் திருமணம்

இந்தியாவின் இளம்  மேயர் ஆர்யா ராஜேந்திரன் திருமணத்தை நடத்தி வைத்த கேரளா முதல்வர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரளாவில்  கடந்த 2021 -ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்  தலைநகரமான திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு மேயராக கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் இளம் மேயர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் .  இவருக்கும் கோழிக்கோடு ,பாலசேரி தொகுதி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ  சச்சின் தேவ் என்பவருக்கும் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

சச்சின் தேவ் கேரளா சட்டசபையில் இளம் வயது எம்எல்ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய திருமணம் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான திருவனந்தபுரத்தில் உள்ள ஏகேஜி சென்டரில் வைத்து நடைபெற்றது.

இந்த திருமணத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். திருமண விழாவில் கேரள மந்திரிகள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.மேலும் திருமணத்துக்கு வருகை தருபவர்கள் பரிசு பொருட்களை தவிர்ப்பதோடு பரிசு பொருட்களுக்கான தொகையை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்கும்படி மணமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Kerala, Kerala CM Pinarayi Vijayan, Marriage

அடுத்த செய்தி