இந்திய அரசியல் சாசனம் குறித்து கேரளா அமைச்சர் ஷாஜி செரியன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் கலாச்சாரா, மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஷாஜி செரியன். இவர் அன்மையில் நடைபெற்ற பொது நிகழ்வில் இந்திய நாட்டின் அரசியல் சாசனம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் மலப்பள்ளில் அவர் பேசிய போது, இந்திய அரசியல் சாசனம் என்பது மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூறியபடியே இந்தியர்கள் அரசியல் சாசனத்தை எழுதியுள்ளனர். 75 வருடங்களுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட இந்த அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை, ஜனநாயகம் பேன்ற சில ஈர்ப்புக்குரிய அம்சங்கள் இருந்தாலும், பெரும்பாலும் மக்களிடம் கொள்ளையடிக்கும் விதமாகவே இந்த அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது எனப் பேசினார்.
இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை கடும் போராட்டங்களை மாநிலத்தில் நடத்தின. அரசியல் சாசனத்தின் மீது பதவியேற்ற அமைச்சர் ஒருவர் இது போன்று அரசியல் சாசனத்தை இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது எனவும் இவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஷாஜி செரியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க:
மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை.. நண்பர்களை பார்க்க சென்றபோது துயரம்
தனது ராஜினாமா தொடர்பாக ஷாஜி செரியன் கூறுகையில், 'அரசியல் சாசனத்தை அவமதிக்கும் நோக்கில் நான் பேசவில்லை. என்னுடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டார்கள். எனது கருத்தை திரித்து பேசிவருகின்றனர். இருப்பினும் என் கருத்து தவறான புரிதலை தந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.